fbpx
Connect with us

பாலா பேச்சிற்கு பாரதிராஜாவின் பதில் இதான் !

News / செய்திகள்

பாலா பேச்சிற்கு பாரதிராஜாவின் பதில் இதான் !

director-bala-bharathirajaகுற்றப்பரம்பரை பட விவகாரத்தில் இயக்குனர்கள் பாலா மற்றும் பாரதிராஜா ஆகியோருக்கு கடந்த சில நாட்களாக மோதல் ஏற்பட்டு வருவதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். இதுதொடர்பாக பாரதிராஜா தரப்பில் சிலர் பாலாவை பொது மேடையிலேயே இழிவாக பேசினர்.

இந்நிலையில் நேற்று இதற்கு தன்நிலை விளக்கமளித்துள்ள இயக்குனர் பாலா, ” நான் குற்றப்பரம்பரை வரலாறை படமாக்க எடுக்கவில்லை. கூட்டாஞ்சோறு நாவலில் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு அதில் என் கற்பனையை கலந்து படமாக்க எடுக்கவுள்ளேன்.

இதை நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். இருந்தும் பாரதிராஜா மற்றும் எழுத்தாளர் ரத்தினக்குமார் ஆகியோர் அநாவசியமாக என்னை பற்றி தவறாக பேசி வருகிறார்கள். இனி ஒரு வார்த்தை இதுசம்பந்தமாக என்னை பற்றி அவர்கள் பேசினால், அது அவர்களுக்கு நல்லதல்ல. இது என் எச்சரிக்கை” என்றார்.

நேற்று பாலா பேசியதற்கு பாரதிராஜா இன்று சுட சுட ஒரு பிரஸ்மீட் வைத்து கொந்தளிப்பார் என்று நினைத்த ஊடகங்களுக்கு பலத்த ஏமாற்றம். இது தொடர்பாக அவரிடம் பேசிய நிருபர்களிடம், “பாலா பேசட்டும்… நான் ஒன்றும் கருத்து சொல்ல முடியாது” என்று கூறிவிட்டார் பாரதிராஜா.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top