Tamil Cinema News | சினிமா செய்திகள்
38 வருட சினிமா வாழ்க்கையில் பாரதிராஜா மனோரமாவுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? இதுதான் காரணம்!
தமிழ் சினிமாவில் கிராமத்து படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்து சினிமாவுக்கு வேறு ஒரு பாதையைக் காட்டியவர் தான் பாரதிராஜா. 1977 ஆம் ஆண்டு வெளிவந்த 16 வயதினிலே தான் முதல் படம்.
முதல் படமே அதிரி புதிரி வெற்றியைப் பெற்றது. அதில் நடித்த சப்பானி என்ற கதாபாத்திரத்தை விட ரஜினியின் பரட்டை கதாபாத்திரம் பெரிய வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் மிக நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் குணச்சித்திர நாயகியாக தனி ஒருவராக கலக்கியவர் ஆச்சி மனோரமா. அன்றைய கால நடிகர்கள் முதல் இன்றைய கால நடிகர்கள் அனைவருடனும் நடித்து விட்டார்.
ஆனால் பாரதிராஜா தன்னுடைய 38 கால சினிமா வரலாற்றில் மனோரமாவை இதுவரை ஒரு படத்தில் கூட பயன்படுத்தவில்லை. பயன்படுத்தவில்லை என்று கூறுவதை விட வாய்ப்பு தரவில்லை என்று சொல்லலாம்.
அதற்கு காரணம் காந்திமதி என்ற மற்றொரு ஆளுமைதான். 16 வயதினிலே என்ற முதல் படத்திலேயே பாரதிராஜாவின் கவனத்தை ஈர்த்த காந்திமதி தொடர்ந்து அவரது படங்களில் பணியாற்றி வந்தார்.
இதன் காரணமாகவே பாரதிராஜாவுக்கு ஆச்சி மனோரமாவின் நடிப்பு தேவைப்படவில்லை. ஆனால் காந்தியை விட மனோரமாவுக்கு நல்ல மவுசு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மனோரமாவை விட காந்திமதி நல்ல நடிகை என பிரபலங்கள் பலரும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அதேபோல் மணிரத்னம் படத்திலும் இதுவரை மனோரமா நடித்ததில்லையாம். டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் இந்த தகவல் கிடைத்தது.
