பார்த்திபன் ஒரு புதுமைப்பித்தன் என்று யார் பாராட்டி வைத்தார்களோ, அந்த நபரை பிடித்து இழுத்து வந்து லாடம் கட்டினால் எல்லாம் சரியாகிவிடும். ஏன்? எல்லாரையும் விட நன்றாக பேசி, கவனத்தை ஈர்த்து விட வேண்டும் என்கிற ஒரே எண்ணத்தை மனதில் வைத்துக் கொண்டு மேடைகளில் இம்சையை கூட்டுவது அவரது வழக்கம். வாடிக்கை.

அப்படிதான் குரங்கு பொம்மை பட விழாவிலும் தன் அதிமேதாவித்தனத்தை காட்டியிருக்கிறார் அவர்,. எப்படி? அப்படத்தில் ஒரு வெயிட்டான ரோலில் நடித்திருக்கும் பாரதிராஜாவை புகழ்வதுதான் பார்த்திபனின் நோக்கம். அதே நேரத்தில் மக்களிடம் கைதட்டல் வாங்கியாகணுமே? மைக்கை பிடித்தவர் பாரதிராஜா ஒரு குரங்கு என்று சொல்லப் போக, எல்லாருக்கும் ஒரே குழப்பம். ஏதோ தில்லாலங்கடி செய்யப் போகிறார் என்பதை மட்டும் எதிர்பார்த்திருந்தார்கள்.

தொடர்ந்து பேசியவர் அந்த குரங்கு க்கு விளக்கம் கொடுத்தார்.

கு / குணவான்
ர / ரசனையாளர்
ங் / இங்கிதம் தெரிந்தவர்
கு / குவாலிட்டியானவர் 

விளக்கம் எப்படி? அவர் எதிர்பார்த்த்தை போலவே செம கைத்தட்டல். இதுபோல எப்படி வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் மனசார திட்டிவிட்டு பிற்பாடு சமாளிக்கலாம்.