Connect with us
Cinemapettai

Cinemapettai

பாரதிராஜா திரைப்பட பயிற்சி நிறுவனம்: ரஜினி துவக்கினார்

bharathiraja

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாரதிராஜா திரைப்பட பயிற்சி நிறுவனம்: ரஜினி துவக்கினார்

சென்னை: பாரதிராஜா பன்னாட்டு திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் துவக்க விழா நடைபெற்றறது. விழாவை நடிகர் ரஜினி காந்த் துவக்கி வைத்தார். விழாவில் நடிகர்கள் கமலஹாசன், நாசர், சிவகுமார், கார்த்தி, வைரமுத்து மற்றும் இயக்குனர்கள் பார்த்திபன், பாண்டிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய பாண்டிராஜ் இயக்குநர் பாரதிராஜாவின் படத்தை பார்த்ததால் இயக்குனராக ஆசைப்பட்டு சினிமாவிற்கு வந்ததாக கூறினார்.

தொடர்ந்து பேசிய பார்த்திபன் சினிமாவில் நவீன தொழில் நுட்பம் காரணமாக கலைத்துவம் குறைந்து வருவதாக கூறினார். இன்று துவக்க விழா கண்டுள்ள பாரதிராஜா இண்டர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சினிமா என்ற திரைப்பட பயிற்சி நிறுவனம் திரைக்கதை அமைப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, சவுண்ட் இன்ஜினியரிங், எடிட்டிங், நடிப்பு உள்ளிட்ட பல பிரிவுகளில் பாடம் கற்றுத்தரப்பட உள்ளது. நம் திரைக்கலையை தொழில் நுட்பத்தோடு இணைந்து இந்திய திரையுலகை உலகதரத்திற்கு உயர்த்தும் முயற்சியே இது என பயிற்சி நிறுவனம் குறித்து பாரதிராஜா கூறினார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top