பாக்யராஜிற்கு எதிராக பாராதிராஜா செய்த சூழ்ச்சி.. ஆனா அதுக்கு அப்புறம் தான் மனுஷன் வேற லெவல்

கோலிவுட்டில் ஒரு சிறந்த நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், வசன எழுத்தாளர், திரைக்கதை அமைப்பாளர் என பன்முக திறமையுடன் வலம் வரும் நபர் என்றால் அது பாக்யராஜ் தான். இவரது படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்று வந்தன. ஒரு சிறந்த நடிகராகவும், இயக்குனராகவும் முத்திரை பதித்த பாக்யராஜ் ஆரம்பகாலத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார்.

இயக்குனர் சிகரம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த பாக்யராஜ் 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட பல படங்களில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இதுதவிர ஒரு சில படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

பின்னர் ஒரு கட்டத்தில் பாக்யராஜ் தனியாக சென்று படம் இயக்க முடிவு செய்தார். ஆனால் இதையறிந்த பாரதிராஜா எங்கே பாக்யராஜ் தனியாக படம் இயக்கினால் தன்னை விட்டு விலகி விடுவாரோ? பெரிய இயக்குனராக வளர்ந்து விடுவாரோ என்ற பயத்தில் அவரது அடுத்த படத்திலேயே பாக்யராஜை ஹீரோவாக போட்டு விட்டார்.

இந்த சூழ்ச்சி காரணமாகவே பாரதிராஜா தான் இயக்கிய புதிய வார்ப்புகள் படத்தில் பாக்யராஜை வசனகர்த்தாவாக மட்டும் அல்லாமல் ஹீரோவாகவும் அறிமுகப்படுத்தினார். தன்னிடம் பணியாற்றிய பாக்யராஜ் வெளியில் சென்று வளரட்டும் என நினைக்காமல் பாராதிராஜா இப்படி ஒரு சூழ்ச்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதன் பின்னர் பாக்யராஜ் அவரைவிட்டு விலகி இயக்கிய முதல் படம் தான் சுவர் இல்லாத சித்திரங்கள். இந்த படத்தை பாக்யராஜ் இயக்கியதோடு மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடத்திலும் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களை இயக்கிய பாக்யராஜ் நடிகர் தயாரிப்பாளர் இயக்குனர் என தனது திறமையை வளர்த்துக் கொண்டு தற்போது கோலிவுட்டில் ஒரு முத்திரையை பதித்துள்ளார்.

இதற்கு அடுத்தபடியாக தனது மகனையும் சினிமாவில் எப்படியாவது சாதித்துவிட வேண்டும் என்பதற்காக தற்போது முருங்கை சீசன் எனும் படத்தையும் இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாக உள்ளது. இப்படத்தின் வெற்றியை வைத்து சாந்தனுவும் சினிமாவில் சாதிக்க முடியும் என்பது தெரியும்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்