சனிக்கிழமை, நவம்பர் 2, 2024

8 வருடத்திற்கு முன் போட்ட பிளான், இப்போ ஒர்க்கவுட் ஆகுது.. அதிரடி திருப்பங்களுடன் பாரதிகண்ணம்மா

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் எட்டு வருடங்களாக பிரிந்து வாழும் கணவன் மனைவியை அவர்களது குழந்தைகள் சேர்க்கும் என சௌந்தர்யா எட்டு வருடங்களுக்கு முன்பே பிளான் போட்டார். அதன் காரணமாகவே கண்ணம்மாவிற்கு பிறந்த இரட்டை குழந்தையில் ஒரு குழந்தையை எடுத்து பாரதியிடம் அனாதை என சொல்லி வளர்க்கச் சொன்னார்.

அந்த ஹேமா தான் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரையும் சேர்த்து வைக்கும் என சௌந்தர்யா நம்பினாள். அது இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நடந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் ரவுடி கும்பலிருந்து பாரதியின் உயிரைக் காப்பாற்றிய கண்ணம்மாவுக்கு கையில் காயம் ஏற்பட்டதும் துடிதுடித்த பாரதி அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று முழு மருத்துவ சிகிச்சையும் தன்னுடைய கையாலேயே செய்தான்.

அதன்பிறகும் வீட்டிற்கு வந்து கண்ணம்மாவின் நினைப்பிலேயே இருந்த பாரதியிடம் ஹேமா கண்ணம்மாவை பற்றி நல்ல விதமாகவே பேசிக் கொண்டிருக்கிறாள். இவ்வாறு தனித்தனியாக இருக்கும் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரையும் சேர்த்துவைக்க ஹேமா முடிக்கிறாள்.

ஏற்கனவே வெண்பா, பாரதிக்கு ஒரு துணை வேண்டுமென ஹேமாவிடம் பத்த வைத்ததால், தன்னுடைய அப்பாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க ஹேமா யோசித்துக் கொண்டிருக்கிறாள். இன்னிலையில் பாரதி கண்ணம்மாவை நினைத்துக் கொண்டிருப்பதால் இவர்கள் இருவரும் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என ஹேமா முடிவெடுக்கப் போகிறார்.

அதன் பிறகு ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் சேர்ந்து கண்ணம்மா மற்றும் பாரதி இருவரையும் சேர்த்துவைக்க போகின்றனர், ஆனால் அந்த குழந்தைகளுக்கு, இவர்கள் இருவரும் கணவன் மனைவி என்ற விஷயம் தெரியாது.

இருப்பினும் இந்த குழந்தைகள் இப்படி தான் யோசிக்கும் என்று ஏற்கனவே சௌந்தர்யா 8 வருடத்திற்கு முன்பு சிந்தித்தது தற்போது சரியாக இருக்கிறது. அத்துடன் கண்ணம்மாவிடம் வளரும் லட்சுமிக்கும் அப்பாவின் ஏக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் கண்ணம்மாவும் இதற்கு சம்மதம் தெரிவிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -spot_img

Trending News