வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பாரதி கண்ணம்மா நாயகனின் ஒரு நாள் சம்பளம் தெரியுமா? டிஆர்பியை ஏற்ற கொட்டிக்கொடுக்கும் விஜய் டிவி

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா என்ற சீரியல் தற்போது தமிழக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்கக்கூடிய சீரியல்களில் இந்த சீரியல் முதலில் இடத்தை பிடித்துள்ளது.

அத்துடன் மற்ற சேனல்களின் டிஆர்பி ரேட்டிங்கையும் அடித்து தும்சம் செய்கிறது. ஏனென்றால் விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் மற்ற சீரியல்களை காட்டிலும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

முதலில் இந்த சீரியலை சமூகவலைதளத்தில் கேலி கிண்டல் செய்து வந்தனர். ஆனால் பின்பு அதுவே பிரபலம் அடைவதற்கு சாதகமாக மாறி ரசிகர்களிடம் நன்கு பிரபலமடைந்தது. குடும்ப பெண்கள் அனைவரும் இந்த சீரியலை பற்றி தான் பேசிக்கொண்டிருப்பார்கள். அந்த அளவிற்கு இந்த சீரியல் பற்றி அவர்கள் மனதில் பதியும் படி உருக்கமான காட்சிகள் அமைத்திருந்தார் இயக்குனர்.

விருவிருப்பான கட்டமைப்பில் இருக்கும் பாரதிகண்ணம்மா சீரியலில் கதாநாயகனாக பாரதி கதாபாத்திரத்தில் நடிக்கும் அருண் பிரசாத்திற்கு எவ்வளவு சம்பளம் என்ற விவரம் தற்போது கிடைத்துள்ளது.

bharathi-cinemapettai
bharathi-cinemapettai

இந்த சீரியலில் தனக்குரிய கேரக்டரில் கச்சிதமாக நடித்து வரும் அருண் பிரசாத் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் சம்பளம் வாங்குகிறாராம். இதைக்கேட்டதும் ரசிகர்களின் வாயடைத்துப் போயுள்ளனர்.

- Advertisement -

Trending News