Connect with us
Cinemapettai

Cinemapettai

bharathi-raja-rani2

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மன்னிப்பு கேட்டபடி நெஞ்சை பிடித்து கிலே விழுந்த மாமியார்.. மங்குனி டாக்டர் என்பதை நிரூபித்த பாரதி

விஜய் டிவியில் கடந்த வாரம் முதல் இந்த வாரம் வரையிலும் பாரதிகண்ணம்மா மற்றும் ராஜா ராணி2 ஆகிய இரண்டு சீரியல்களின் மகா சங்கமம் ஒருமணிநேரம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் ஊர் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் போலி சாமியாரின் முகத்திரையை சந்தியா கிழித்தெறிந்திருக்கிறார்.

அவர் சீடர்களுடன் செய்த பொய் பித்தலாட்டத்தை அவர்களது வாயாலேயே ஊர்மக்கள் முன்னிலையில் ஒத்துக் கொள்ள வைத்து, சிவகாமியை பகடைக்காயாக பயன்படுத்தியதையும் சந்தியா நிரூபித்திருக்கிறார். இதனால் சிவகாமி சந்தியாவை புரிந்துகொள்ளாமல் பேசியதற்காக மன்னிப்பு கேட்கிறார்.

அதன்பிறகு பார்வதியை தீவிரவாதி செல்வம் துப்பாக்கி முனையில் அந்த இடத்திற்கு கொண்டு வந்து, போலி சாமியாரை மக்களிடமிருந்து விடுவிக்க நினைக்கிறார். ஆனால் அந்த சமயம் போலீசாரின் உதவியை நாடிய சந்தியா, பார்வதியை எப்படியாவது உயிருடன் செல்வத்திடம் இருந்து மீட்டு விட வேண்டும் என பரிதவிக்கிறார்.

அப்போது வில்லி அர்ச்சனா துணிச்சலுடன் ஒரு உருட்டு கட்டையை எடுத்து செல்வத்தின் மண்டையில் அடித்து. துப்பாக்கியை லாபகரமாக பிடுங்கினார்.  பார்வதி உயிருடன் மீட்பதற்கு முழு காரணம் அர்ச்சனா என்பதால் அவரை அனைவரும் பாராட்டுகின்றனர்.

அர்ச்சனாவின் இந்த நடவடிக்கை சீரியல் ரசிகர்களை வியப்படைய செய்வதுடன் இந்த சீரியல் கிளைமேக்ஸை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் அர்ச்சனா சந்தியாவிற்கு எல்லா பாராட்டும் வந்து விடக்கூடாது. இதில் தன்னுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக வில்லத்தனமாக யோசித்து பார்வதியை தீவிரவாதியிடமிருந்து காப்பாற்றியிருக்கிறார்.

பின்பு வீட்டிற்கு சென்று சந்தியாவிடம் மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்கும் சிவகாமி அதன் பிறகு நெஞ்சு வலியில் மயக்கம் அடைந்து கீழே விழுகிறார். உடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். சிவகாமி பரிசோதித்த டாக்டர் பாரதி அவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டிருப்பதாகவும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறுகிறார்.

‘இந்த பாரதிக்கு வேற வேலையே இல்லை’ பாரதிகண்ணம்மா சீரியலில் ஒரு குழந்தைக்கு ஹார்ட் ஆபரேஷன், அதன்பிறகு வயதான பாட்டி தற்போது சிவகாமி என சீரியலில் இதய அறுவை சிகிச்சை நிபுணர் என்பதை, ‘மங்குனி டாக்டர் மணிக்கு ஒரு தடவை நிரூபிக்கிறாயா’ என நெட்டிசன்கள் கிண்டல் அடிக்கின்றனர்.

Continue Reading
To Top