ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

ஒரே கதையை உருட்டும் பாரதி கண்ணம்மா இயக்குனர்.. இதுக்கு ஒரு எண்டே இல்லையா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. தற்போது இத்தொடரில் பாரதி, கண்ணம்மா இருவரும் விவாகரத்து பெற்று நிரந்தரமாக பிரிய உள்ளனர். இந்நிலையில் லட்சுமிக்கு தன்னுடைய அப்பா தான் பாரதி எனத் தெரிந்த நிலையில் விவாகரத்தை தடுக்க பல்வேறு முயற்சிகள் செய்து வருகிறார்.

மேலும் பாரதி மீது காதல் வெறி கொண்டிருந்த வெண்பாவை திருமணம் செய்து கொள்ள ரோஹித் என்ற புது நபர் வந்துள்ளார். இந்நிலையில் வெண்பாவின் பிறந்தநாளன்று ரேகா தனக்கு வரப்போகிற மருமகன் ரோகித் என அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறார்.

ஆனால் மேடையிலேயே நான் பாரதியை தான் காதலிக்கிறேன் என வெண்பா உண்மையை போட்டு உடைக்கிறார். ஆனால் பாரதி, ஒரு நாளும் பெண்பாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்கு வந்ததே இல்லை என சரியான பதிலடி கொடுக்கிறார்.

இதனால் வெண்பா மிகுந்த அவமானத்திற்கு உள்ளாகிறார். இந்நிலையில் தற்போது பாரதிகண்ணம்மா தொடரின் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விவாகரத்தை அறிந்த ஹேமா தனது தந்தையிடம் விவாகரத்து செய்யக் கூடாது என போராடுகிறாள்.

அருகில் கண்ணம்மா, லட்சுமி, சௌந்தர்யா என மொத்த குடும்பமுமே உள்ளது. ஹேமாவின் அழுகையை பார்க்க முடியாத பாரதி விவாரத்து செய்ய மாட்டேன் என சத்தியம் செய்து கொடுக்கிறார். இதனால் லட்சுமி, ஹேமா, கண்ணம்மா என அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதனால் மீண்டும் பாரதி, கண்ணம்மா இருவரும் ஒரே வீட்டில் வசிக்க அதிக வாய்ப்புள்ளது. மீண்டும் முதலில் இருந்து பாரதிக்கு கண்ணம்மா மீது காதல் வருவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டு தொடரை இழுத்துக் கொண்டே இருக்க இயக்குனர் முடிவு செய்துள்ளார். இதனால் ரசிகர்களுக்கு இத்தொடர் மீது அலுப்பு வந்துள்ளது. மேலும் இத்தொடருக்கு ஒரு எண்டே இல்லையா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News