சின்னத்திரையில் ரொம்பவே பேமஸ் ஆன சீரியல் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியல். இப்போ இந்த சீரியலின் முக்கியமான பிரபலம் மாறப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. 2019 ஆம் ஆண்டு, விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியல் ஒளிபரப்பான கொஞ்ச நாட்களிலேயே முதல் இடத்தை பிடித்தது.
எந்த சீரியலிலும் இல்லாத ஒரு முக்கியமான கதையை கொண்ட இந்த சீரியலில் கருப்பா இருக்க பெண்களை குறைத்து எடை போடுற சமுதாயத்தை, எப்படி அந்தப் பெண் சாதிக்கிறார் என்பதை எடுத்துக்காட்டும் சீரியல்தான் பாரதிகண்ணம்மா. கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி, பாரதி கதாபாத்திரத்தில் அருண்பிரசாத் நடிச்சிருந்தாங்க. இவர்களுடைய ரொமான்ஸ், கெமிஸ்ட்ரி எல்லாமே நல்ல ஒர்க்கோட் ஆன நேரத்தில்தான் சீரியல் உடைய முக்கியமான திருப்பம் வெளியாகி டாப் சீரியல் பொசிஷனை பெற்றது.
இந்த சீரியலின் முதல் பாகத்தை தொடர்ந்து பாரதிகண்ணம்மா 2 வெளியாகி தற்போது விறுவிறுப்பான கதை களத்துடன் ஓடிக்கொண்டிருந்த வேளையில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி திடீரென சீரியலை விட்டு வெளியேறினார். என்னது ரோஷினி போறாங்களாம் அப்படின்னு ரசிகர்கள் ரொம்பவே அப்செட்டில் இருந்தாங்க. அப்புறம் ரோஷினிக்கு பதிலாக நடிகை வினுஷா தேவி என்பவர் கண்ணம்மாவாக நடித்து வருகிறார். தற்போது பாரதிகண்ணம்மா தொடர் முக்கியமான மாற்றங்கள், திடீர் திருப்பங்கள் இருக்கும் நிலையில், தற்போது பாரதியாக நடிக்கும் அருண்பிரசாத் இந்த சீரியலிலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் அருண் பிரசாத், பாரதி கதாபாத்திரத்தில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இன்று வரை நடித்து வருகிறார். ஆனால் தற்போது சமூக வலைத்தளங்களில் இவருக்கு பதிலாக நடிகர் சஞ்சீவ் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தளபதி விஜய்யின் நண்பரான இவர் பல மெகா தொடர்களில் நடித்துள்ளார். முக்கியமாக திருமதி செல்வம், யாரடி நீ மோகினி உள்ளிட்ட பிரபல தொடர்களில் நடித்துள்ளார். தற்போது திரைப்படங்களில் நடித்து வரும் சஞ்சீவ் மீண்டும் நாடகத்தில் நடிப்பதற்காக ஆயத்தமாகி வருகிறார். இந்த நிலையில் தற்போது பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதியின் கதாபாத்திரத்தில் சஞ்சீவ் நடிக்க உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்த சஞ்சீவ் அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக களமிறங்கினார். இவர் அங்கு சென்று ஒரு கலக்கு கலக்குவார் என்று நினைத்திருந்த நிலையில், தளபதி விஜய்யின் புகழை பற்றி மட்டுமே பேசி போட்டியில் கோட்டையை விட்டு வெளியேறினார். இதனிடையே தன்னுடைய மனைவி ப்ரீத்தியோடு பல இன்டர்வியூவில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதியாக நடிப்பதற்காக ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் அருண்பிரசாத் ஏன் விலக போகிறார் என்ற தகவல் சரிவர தெரியவில்லை.
தற்போது பாரதிகண்ணம்மா சீரியலில் பிரிந்திருக்கும் பாரதி, கண்ணம்மாவை மீண்டும் சேர்த்து வைக்கும் கதைக்களத்தில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் வேளையில், தற்போது அருண் பிரசாத்தின் விலகல் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அருண் பிரசாத்திற்கு பதிலாக சஞ்சீவ் பாரதியாக நடித்தால் எப்படி இருக்கும் என்ற பதைபதைப்புடன் ரசிகர்கள் உள்ளனர். எது எப்படியோ இந்த சீரியலை முடித்தால் போதும் என்ற விமர்சனங்களோடு பல நெட்டிசன்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.