Connect with us
Cinemapettai

Cinemapettai

bharathikannama-raja-rani

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உயிருக்குப் போராடும் நேரத்தில் பாரதி செய்த செயல்.. ராஜராணி படத்தை மிஞ்சிய பாரதிகண்ணம்மா

விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியல் கடந்த சில மாதங்களாகவே டல் அடிக்கிறது. இதனால் இந்த சீரியலில் கூடுதல் விறுவிறுப்பை ஏற்படுத்த சீரியலின் இயக்குநர் பக்கா பிளான் போட்டு இருக்கிறார். அதாவது பாரதி சிகிச்சை கொடுத்துக்கொண்டிருக்கும் சௌந்தர்யாவின் கல்லூரி ஆசிரியை ஜானகி இறக்கும் தருவாயில் இருக்கிறார்.

இதனால் சௌந்தர்யா மூலம் பாரதி-கண்ணம்மா இருவருடைய பிரச்சனை ஜானகிக்கு தெரிந்திருக்கிறது. இதனால் இறப்பதற்கு முன் பாரதி, கண்ணம்மா இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் இருவரையும் தனித்தனியே அழைத்து சத்தியம் வாங்குகிறார்.

இருவரும் தங்களுடைய குழந்தைகளுடன் இதுவரை நடந்த எல்லா பிரச்சனையும் மறந்துவிட்டு சந்தோசமாக ஒரு நாள் வெளியே சென்று வாழ்ந்து பார்க்க வேண்டும் என்பதுதான் ஜானகி அவர்களிடம் வாங்கிய சத்தியம். இதற்கு பதில் ஜானகி பாரதியை ஒரு DNA டெஸ்ட்க்கு சொல்லி இருந்தால் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம்.

அப்படி செய்தால் சீரியலே முடிந்துவிடும் அல்லவா. அதை மட்டும் ஒருகாலமும் செய்ய மாட்டார்கள். இதன்பிறகு பாரதி, கண்ணம்மா இருவரும் கிளம்பி ஜானகியின் வார்த்தைக்காக தங்களது குழந்தைகளுடன் வெளியூர் செல்ல திட்டமிடுகின்றனர்.

அங்குதான் ராஜா ராணி 2 சீரியல் உடன் பாரதிகண்ணம்மா சீரியல் மகாசங்கமம் ஆகப்போகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஒரு முறை இதேபோன்றுதான் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 சீரியல்களின் மகா சங்கமம் நடத்தப்பட்டு டி ஆர் பி-யில் விஜய் டிவி தூள் கிளப்பியது.

எனவே அதே அஸ்திரத்தை தற்போது மீண்டும் விஜய் டிவி பயன்படுத்துவதற்கு ஜானகி வாங்கிய சத்தியம் வழிவகுக்க போகிறது. போனமுறை பள்ளியிலிருந்து ஹேமா மற்றும் லஷ்மி இருவரும் சுற்றுலா சென்ற பிறகு லஷ்மிக்கு பாரதி தான் தன்னுடைய அப்பா என்ற உண்மை தெரிந்தது.

தற்போது ஹேமாவிற்கு, கண்ணம்மா தான் தன்னுடைய அம்மாவாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த பயணத்திற்கு பிறகு ஹேமாவிற்கும் கண்ணம்மா தான் தன்னுடைய அம்மா என்ற விஷயம் தெரிய போகிறது. இப்படி பரபரப்பான சம்பவங்கள் அடுத்த வார மகாசங்கத்தின் போது நடைபெற காத்திருக்கிறது.

தற்போது பாரதிகண்ணம்மா சீரியலில் நடப்பது போன்று தான் ஏற்கனவே நயன்தாரா-ஆர்யா நடிப்பில் வெளியான ராஜா ராணி படமும் வெளிவந்ததால், அந்த படத்தையே மிஞ்சும் அளவுக்கு பாரதிகண்ணம்மா ஓடிக்கொண்டிருக்கிறது என நெட்டிசன்கள் கிண்டல் அடிக்கின்றனர்.

Continue Reading
To Top