இன்னும் பாரதிகண்ணம்மாக்கே முடிவு தெரியல.. இதுல பாரதிதாசன் காலனி வேறயா

ஆரம்பத்தில் விஜய் டிவி புதுவிதமான ரியாலிட்டி ஷோக்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வந்தது. ஆனால் தற்போது காலை முதல் இரவு வரை சீரியல்களை மட்டுமே ஒளிபரப்பு செய்து வருகிறது. அதற்கு ஒரு படி மேலாக சனிக்கிழமையும் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது.

இந்நிலையில் விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா தொடர் சில வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் இத்தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து. ஆனால் தற்போது ரசிகர்களை மிகவும் எரிச்சலூட்டும் விதமாக கதை நகர்ந்து வருகிறது. இத்தொடரின் இயக்குநர் கதையை ஜவ்வாக இழுத்து வருகிறார்.

ஒரே ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் மொத்த கதையும் முடிந்துவிடும். ஆனால் அதை மட்டும் செய்யாத பாரதி மற்ற எல்லா வேலைகளும் செய்து வருகிறார். இவ்வாறு பாரதிகண்ணம்மா தொடர் முடிவு தெரியாத நிலையில் தற்போது பாரதிதாசன் காலனி என்ற புது தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

விஜய் டிவியில் பல்வேறு தொடர்களில் நடிக்கும் பிரபலங்கள் ஒட்டுமொத்தமாக பாரதிதாசன் காலனி தொடரில் நடிக்கின்றனர். அதாவது இத்தொடர் ஒரு அப்பார்ட்மெண்டில் சுற்றியே கதை நகர உள்ளது. இதனால் பல குடும்பங்கள் இணைந்து ஒன்றாக இருப்பது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து. குடும்பங்களாக மகிழ்ச்சியுடன் இருக்கும் இந்த தொடர் கண்டிப்பாக பாசிட்டிவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சென்டிமென்ட், காதல், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த தொடராக இருக்க உள்ளது.

இந்நிலையில் விஜய் டிவிக்கு இந்த புது வரவால் எந்த தொடர் முடியப்போகிறது என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர். மேலும் இத்தொடரை ப்ரைம் டைமில் ஒளிபரப்பு செய்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்