ஈகோவை விட்டு இறங்கி வந்த பாரதி.. இப்பயாவது ஒரு எண்டு கார்டு போடுங்கப்பா

விஜய் டிவியில் விறுவிறுப்பான கதைகளத்துடன் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடரில் கண்ணம்மா தனக்காக உயிரையும் கொடுக்க துணிந்ததை எண்ணி பாரதி கொஞ்சம் மனசு மாறி உள்ளார். ஆனால் முழுவதுமாக கண்ணம்மாவை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வருகிறார்.

இந்த சூழலில் பாரதி வீட்டிலேயே கண்ணம்மா மற்றும் லட்சுமி இருவரும் தங்கி உள்ளனர். மேலும் ஹேமா, லட்சுமி இருவரும் பள்ளிக்கு சென்றுள்ள நிலையில் அங்கு ஏதோ குழந்தைகளுக்குள் தகராறு வருகிறது. இதனால் ஹேமா மற்றும் லட்சுமி மற்ற குழந்தைகளிடையே சண்டை போட்டுக் கொள்கின்றனர்.

Also Read :புருஷன் கல்யாணத்துக்கே அழைத்த மகள்.. ராதிகாவின் திருமணத்தை நிறுத்த போட்ட பிளான்

இதை பார்த்த ஆசிரியர்கள் இருவரையும் பெற்றோரை அழைத்து வந்து கடிதம் எழுதி தரச் சொல்லுங்கள் என கூறுகிறார். இந்நிலையில் பாரதி வந்த ஹேமாவிற்கான கடிதத்தை எழுதிக் கொடுக்கிறார். மேலும் லட்சுமி தனியாக வெளியில் நிற்பதால் அவளுக்கும் லெட்டர் எழுதிக் கொடுக்கும்படி பாரதியிடம் ஹேமா கூறுகிறார்.

ஆனால் லட்சுமி ஓட அம்மா வருவாங்க என்று கூறிவிட்டு பாரதி செல்கிறார். இதனால் தன்னுடைய அப்பா தனக்கு உதவி செய்யவில்லையே என்ற வருத்தத்தில் லட்சுமி உள்ள நிலையில் பாரதியால் அதற்கு மேல் செல்ல முடியவில்லை. தனது உள்மனதில் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி காரணமாக மீண்டும் வந்த லட்சுமிக்கு நான் கடிதம் எழுதி தருவதாக கூறுகிறார்.

Also Read :வானத்துக்கும் பூமிக்கும் குதித்த கதிர்.. உறவே வேண்டாம் என விலகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சொந்தம்

ஆனால் அந்த ஆசிரியர் லட்சுமியின் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் இந்த கடிதத்தை எழுதி தர வேண்டும் என சொல்ல பாரதி நானும் லட்சுமியின் குடும்பத்தை சேர்ந்தவர் என்று சொல்கிறார் இதைக் கேட்ட லட்சுமிக்கு சொல்ல முடியாத அளவுக்கு சந்தோசம் ஏற்படுகிறது தனது அப்பா முதல் முறையாக தன்னை சொந்தம் என்று லட்சுமிக்கு அளவு கடந்த மகிழ்ச்சி.

மேலும் இப்பயாவது சட்ட புட்டன்னு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்துட்டு பாரதி கண்ணம்மா சீரியலுக்கு எண்டு கார்ட் போடுமாறு ரசிகர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். மேலும் இப்போது உள்ள காட்சிகளை பார்த்தால் விரைவில் தொடர் கிளைமாக்ஸ்சை நோக்கி செல்வது போல தான் உள்ளது.

Also Read :கண்ணமாவை அடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் விவாகரத்து நடிகை.. வைரலாகும் புகைப்பட ஆதாரம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்