Tamil Nadu | தமிழ் நாடு
மன்னிப்பு கேட்கறவன் மனுஷன், மன்னிக்கிறவன் பெரிய மனுஷன்.. இறுதி பஞ்சாயத்தில் இறங்கிவந்த பாலா, பாரதிராஜா
தமிழ் சினிமாவில் பாசத்துக்குரிய பாரதிராஜா என்று அன்போடு அழைக்கப்படுபவர், தனக்கென ஒரு ரசிகர் சாம்ராஜ்யத்தை படைத்தவர். சினிமாவில் இயக்குனர்களுக்கு என்று தனித்தனியான திறமைகள் இருக்கும். அந்த வகையில் பாலாவும் சளைத்தவரல்ல, சில மாதங்களாக குற்றப்பரம்பரை என்ற கதையை படமாக உருவாக்குவதற்காக பாரதிராஜா மற்றும் பாலாவுக்கு இடையே வாக்குவாதம் முற்றியது.
அதாவது பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது அவதூறான வார்த்தைகளை வெளியிட்டு, தாங்களாகவே அசிங்கப்படுத்திக் கொண்டனர் என்று தான் கூற வேண்டும். இந்த நிலையில் பாரதிராஜாவின் பிறந்தநாளையொட்டி திரையுலகினர் அனைவரும் ஒன்றுகூடி அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர், அதாவது;
பாரதிராஜாவுக்கு தாதா சாகேப் பால்கே விருதை கொடுக்கவேண்டும் என்பது அந்த கடிதத்தில் கூறியுள்ளனர். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல இயக்குனர்களின் பெயர்கள் அதில் பொறிக்கப்பட்டுள்ளது, முக்கியமாக இயக்குனர் பாலாவின் பெயரும் அதில் உள்ளதாம்.
இதனை பார்த்து சினிமா பிரபலங்கள் ஷாக்காகி விட்டனராம், ஏனென்றால் இவர்கள் இருவரும் எலியும் பூனையுமாக இருந்த காலங்கள் போய் தற்போது நண்பர்களாகி விட்டார்கள்.
ஆமாம் சில தினங்களுக்கு முன்னதாக இவர்கள் நேரடியாக சந்தித்து சமரசமாகி தற்போது நண்பர்களாக விட்டார்களாம். குற்றப்பரம்பரை படத்தை தற்போது பாரதிராஜா வெப் சீரியலாக எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் சினிமாவில் எதுவுமே நிரந்தரம் அல்ல மனிதர்களை மதிக்கத் தெரிந்த உலகம் சினிமா உலகம் என்பதை நிரூபித்து விட்டனர். ஆனால் இருவருக்கும் பஞ்சாயத்து பண்ணிய தலைவர் யாரென்று உறுதியாக தெரியவில்லை. அனைவரும் வைரமுத்துவாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
