விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் டிஆர்பி இல் முதலிடத்தை பிடித்த தொடர்தான் பாரதிகண்ணம்மா. இத்தொடரில் பாரதி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் அருண்.
பாரதி கண்ணம்மா தொடரின் ஆரம்பத்தில் பாரதி கதாபாத்திரம் பாசிட்டிவ் ரோலில் எடுத்துச் சென்றது. டாக்டர் பாரதி என்றாலே எல்லோருக்கும் ஞாபகம் வருவது பாரதிகண்ணம்மா தொடர்தான். அந்தளவுக்கு பாரதிகண்ணம்மா தொடர் மூலம் பிரபலமானவர் அருண்.
தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா தொடரில் கோர்ட் ஆர்டர் இன் படி கண்ணம்மா உடன் பாரதி சேர்ந்து வாழ்வதற்கு கண்ணம்மா வீட்டிற்கு பாரதி செல்கிறார். இனிமேல் எபிசோட் விறுவிறுப்பாக செல்லும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சின்னத்திரை நடிகர்களிலேயே அதிகம் சம்பளம் வாங்கக்கூடிய கதாநாயகன் அருண் தான். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ள அருண் தற்போது வெளியூர் சென்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுகிறார்.
வீடியோவில் அவர் கொடுத்த கேப்ஷனில் நீண்ட நாளுக்குப் பின்பு பாரதி ரோலில் இருந்து வெளியே வந்த அருணாக நான் என குறிப்பிட்டிருந்தார். இதனால் இனி பாரதி கண்ணம்மா தொடரில் இவர் நடிக்க மாட்டாரா இல்லை பாரதிகண்ணம்மா தொடர் முடிய போகிறதா என்ன ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
ஆனால் அருண் பாரதிகண்ணம்மா தொடரில் இருந்து விலகவில்லையாம். இத்தொடரில் இருந்து அருண் விடுப்பு எடுத்து வெளிநாடு சுற்றி பார்க்க சென்றுள்ளாராம்.