விஜய் டிவியின் பிரபல சீரியலான பாரதிகண்ணம்மா ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. விஜய் டிவியின் டிஆர்பியை எகுற வைக்கும் இந்த சீரியல் குடும்பத்திற்குள் குழப்பத்தை உண்டாக்குவது போன்று இருக்கும்.
கிட்டத்தட்ட 511 எபிசோடுகள் உள்ள இந்த சீரியல் தற்போது அனைத்து இல்லத்தரசிகளின் கவர்ந்து வருகிறது. இவ்வளவு பெரிய வரவேற்ப்பை கிடைத்ததற்கு முக்கிய காரணம் மீம்ஸ் கிரியேட்டர் தான்.
வீட்டை விட்டு வெளியே சென்ற கண்ணம்மாவை விண்வெளி வரை கொண்டு சென்று அமர்க்களப் படுத்தினர். பாரதிகண்ணம்மாக்கு குடைச்சல் கொடுக்கும் வெண்பா என்ற கதாபாத்திரத்தின் உண்மையான பெயர் பரீனா.
தொகுப்பாளினியாக சின்னத்திரையில் தனது வாழ்க்கை தொடங்கிய பரீனா தற்போது இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பரீனா ரசிகர் கேட்கும் கேள்விக்கு சமீபத்தில் பதிலளித்துள்ளார்.
உங்கள் கணவரோடு இருக்கும் புகைப்படத்தை ஏன் பதிவிடுவது இல்லை.? வெண்பா என்ற கதாபாத்திரத்தை உங்கள் கணவர் எப்படி பார்க்கிறார் என்ற கேள்விக்கு பதிலளித்த உள்ளார் வெண்பா, அனைத்து எபிசோடுகள் அவர் பார்த்து சிரிப்பார் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். அவர் கணவனுடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.