குழந்தையை வைத்து காய் நகர்த்தும் கண்ணம்மா.. இன்னும் எவ்ளோ உருட்ட முடியுமோ உருட்டுங்க பாரதி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா தொடர் டிஆர்பி முதல் இடத்தைப் பிடித்து வருகிறது. இத்தொடரில் பாரதி ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் தன்னுடைய குழந்தை தான் லட்சுமி என்பது தெரிந்துவிடும். ஆனால் டாக்டராக இருக்கும் பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுக்காமல் கண்ணம்மா மீது சந்தேகப்பட்டு வருகிறார்.

இத்தொடரில் எப்போதுதான் லட்சுமிக்கு பாரதி தான் தன் அப்பா என்று தெரியும், பாரதி கண்ணம்மாவையும், லட்சுமியையும் ஏற்றுக்கொள்வாரா என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இந்நிலையில் இத்தொடரில் அதிரடி ட்விஸ்ட் அரங்கேற உள்ளது.

இந்நிலையில் கண்ணம்மாவின் ஆட்டோ டிரைவர் தன் தங்கை நிச்சயதார்த்தத்திற்கு கண்ணம்மாவை அழைக்கிறார். அதுமட்டுமல்லாமல் கண்ணம்மா தான் எல்லாவற்றிலும் முன்னின்று இந்த நிச்சயதார்த்தம் நடத்த வேண்டும் என வற்புறுத்துகிறார்.

இதனால் கண்ணம்மா முன் நின்று எல்லாவற்றையும் செய்ய ஆரம்பிக்கிறார். ஆனால் அதில் ஒருவர் குடும்பத்துடன் சேர்ந்து வாழும் பெண் தான் எல்லாத்தையும் செய்ய வேண்டும் என கண்ணம்மாவை அவமானப்படுத்துவது போல பேசுகிறார்.

இதனால் கோபமடைந்த கண்ணம்மா இன்னும் நான்கு நாட்களில் நடக்க உள்ள கண்ணம்மாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் லட்சுமியின் அப்பாவை எல்லோர் முன்னாடியும் சொல்கிறேன் என சபதம் விடுகிறார். இதனால் லட்சுமி மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்.

இதனால் கூடிய விரைவில் பாரதிதான் தன் அப்பா என்று லட்சுமிக்குத் தெரிய வர போகிறது. இதனால் இந்த வாரம் பாரதி கண்ணம்மா தொடர் மிக விறுவிறுப்பாக இருக்கப்போகிறது. லட்சுமிக்கு தெரிந்த பின்னாவது பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்