ஜாமினில் வெளிவந்த வெண்பா.. பாரதிகண்ணம்மாவில் பிரசவத்திற்கு பின் ரீ-என்ட்ரி!

விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றான பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் விவாகரத்து பெறும் எண்ணத்தில் ஒரே வீட்டில் 6 மாதம் தங்கியிருக்கின்றனர். மேலும் எட்டு வருடங்கள் பிரிந்திருந்த பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் தற்போது சேர்ந்து வாழும்போது ஏற்படும் சண்டை சச்சரவு, ரொமான்ஸ் காட்சிகளும் சீரியல் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துக் கொண்டிருக்கிறது.

அத்துடன் இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் வெண்பாவாக நடிக்கும் ஃபரினாவிற்கு சமீபத்தில் குழந்தை பிறந்து, மீண்டும் சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்கிறார். பாரதிகண்ணம்மா சீரியலில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் வெண்பாவிற்கு, தற்போது ஜாமீன் கிடைத்து வெளியே வந்துள்ளார்.

இதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி பாரதிகண்ணம்மா சீரியலின் விறுவிறுப்பை கூட்டி உள்ளது. இந்தப் ப்ரோமோவில் வெண்பா செம மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார். அத்துடன் இவர், பாரதி மற்றும் கண்ணம்மா இருவரையும் பிரிக்க போவதாகவும், அவர்களுடைய சந்தோசத்தில் பாலூற்றி பொங்க வைக்கப் போவதாகவும் ஆக்ரோசமாக பேசியுள்ளார்.

மேலும் வெண்பா ஜாமினில் வெளிவருவதற்கு மூலகாரணமாக இருந்த சாந்தி மற்றும் மாயாண்டி இருவரை இனி வரும் நாட்களில் வெண்பாவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு பாரதிகண்ணம்மா சீரியலில் ரணகளம் செய்யவுள்ளனர்.

கடந்த சில வாரங்களாக வெண்பாவின் வில்லத்தனம் பாரதிகண்ணம்மா சீரியலில் வெளிப்படாமல் இருந்த நிலையில் சீரியல் அமைதியாக சென்று தற்போது வெண்பா சீரியலில் மீண்டும் என்ட்ரிக்கொடுத்திருப்பது பாரதிகண்ணம்மா சீரியலுக்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது.

எனவே இனிவரும் நாட்களில் வெண்  தன்னுடைய வில்லத்தனத்தை காண்பித்தல் பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மாவை பிரிப்பதற்கு என்னவெல்லாம் திட்டம் போடுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.