பல திருப்பங்களைக் கொண்டு பரபரப்பாக ஓடி மக்களின் எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் எப்பொழுதும் தூண்டும் விஜய் டிவியின் சீரியல்தான் பாரதிகண்ணம்மா. இந்த நெடுந்தொடரில் கண்ணம்மா கதாபாத்திரம்தான் தொடரின் நாயகியாக மாடல் ரோஷினி ஹரிப்ரியன் நடிகையாக அறிமுகமாகி நடித்து வந்தார்.
மேலும் இவர் தனது சிறந்த நடிப்பை தனக்கு கிடைத்த இந்த புதுமுக நடிகைக்கான வாய்ப்பில் நன்றாக வெளிக்காட்டி சீரியலிலும் சரி, மக்களின் மனங்களிலும் பாராட்டுக்குரியவராகவே இருந்து வந்தார்.
இப்படி ரசிகர்களின் மத்தியில் புகழின் உச்சத்தை அடைந்து நிஜ கண்ணம்மாவாகவே வாழ்ந்து மக்களின் செல்வாக்கை பெற்ற நடிகை ரோஷினி, சீரியலில் இருந்து திடீரென விலகுவதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் அதன் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவராமல், இவரின் இந்த கண்ணம்மா ரோலில் அடுத்து நடிக்கவிருக்கும் நடிகை பற்றிய பேச்சு தொடங்கியது. அதில் பலரும் பல விதமாக தங்கள் கருத்துக்களை கூற மாடலாகவும், N4 திரைப்படத்தில் நாயகியாகவும் நடித்த நடிகை வினுஷா தேவி அவர்கள்தான் அடுத்த கண்ணம்மா என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.
தற்பொழுது இது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் விதமாக நடிகை வினுஷா கண்ணம்மா கெட்டப்பில் பாரதியுடன் நடிக்கும் காட்சிகள் இடம்பெறும் புகைப்படம் வெளியாகி இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
நடிகை வினுஷா இந்த கெட்டப்பில் கண்ணம்மாவை அச்சு வார்த்தது போல் அப்படியே உள்ளார். நடிப்பிலும் இப்படியே இருந்தா சூப்பர் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.