திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

ஆஸ்கரை மிஞ்சும் நடிப்பில் பாரதி கண்ணம்மா சீரியல்.. அடங்கப்பா.! உலக நடிப்புடா சாமி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. பல திருப்பங்களுடனும், எதிர்பார்ப்புகளுடனும் விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த சீரியலின் தற்போதைய ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.

அதில் பாரதியின் தந்தைக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவர் சிகிச்சைக்கு முன் தனது மருமகள் கண்ணம்மாவை பார்க்க வேண்டும் என்று தன் மகன் பாரதியிடம் கூறுகிறார்.

பாரதி தன் தந்தையை பார்க்க கண்ணம்மாவை அழைத்து வரும் நிலையில் அவர் கண்ணம்மாவிடம் ஒரு வாக்கு கேட்கிறார். தன் மகன் பாரதியுடன் இணைந்து வாழ வேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறுகிறார்.

இதனால் அதிர்ந்த பாரதியும், கண்ணம்மாவும் என்ன முடிவு எடுப்பார்கள் என்பதாக புரோமோ காட்சிகள் காட்டப்படுகிறது. பல ஆண்டுகளாக பிரிந்து வாழும் பாரதியும், கண்ணம்மாவும் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே உள்ளது.

மேலும் கடந்த வாரம் பாரதி தன் தந்தையிடம் கண்ணம்மாவை நான் தவறாக புரிந்து கொண்டேன் என்று கூறி மன்னிப்பு கேட்பது போல் அழுது நடித்து தன் வீட்டில் உள்ளவர்களை ஏமாற்றுவார். அதேபோல், இப்பொழுது மகனுக்கு போட்டியாக தந்தையும் நடித்து தன் மகனையும், மருமகளையும் சேர்க்க நினைக்கிறாரா என்று ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

bharathi-kannamma-cinemapettai
bharathi-kannamma-cinemapettai

அவர்கள் இணையும் பட்சத்தில் கதை முடிவை நோக்கி செல்கிறதா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே உள்ளது. தற்பொழுது இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.

- Advertisement -

Trending News