தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போது அதிகப்படியாக சீரியலை பார்த்து வருகின்றனர். அப்படி ரசிகர்களால் பார்க்கப்பட்டு பிரபலமான சீரியல்தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நடித்த அருண்பிரசாத் மற்றும் ரோஷினி இவர்களின் நடிப்பு ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.
அதிலும் சமூக வளைதளத்தில் இவர்களது நடிப்பு அதிகப்படியான மீம்ஸ்லால் வெளியானது. அதனை அப்படியே சாதமாக பயன்படுத்திக் கொண்டனர். அதன்பிறகு சமூகவலைதளத்தில் பாரதிகண்ணம்மா மீது வெறுப்பு கலந்த வரவேற்பு உருவானது.
இந்த சீரியலில் ஒரு சில காட்சிகளை பார்க்கும் போது நமக்கு வெறுப்பை தாண்டி இதெல்லாம் நம்பகத்தன்மை இல்லை என்பது வெளிப்படையாக தெரியும். ஆனால் ரசிகர்கள் என்ன செய்வார்கள் இவர்கள் எடுக்கும் காட்சிகள் மட்டும் தானே பார்க்க முடியும் என்பதனாலேயே இதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படாமல் சீரியலை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
தற்போது பாரதிகண்ணம்மா சீரியல் நடித்துவரும் ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு நாளைக்கு எவ்வளவு ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. எப்போதும் சீரியல்களில் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்திற்கு அதிகப்படியான சம்பளம் கொடுப்பது வழக்கம் தான் அப்படி இந்த சீரியலில் 2 பேருக்கு மட்டுமே அதிகப்படியான சம்பளம் கொடுக்கப் பட்டுள்ளது.
அருண் பிரசாத் – ரூ 20000, ரோஷினி- ரூ 20000, ரூபாஸ்ரீ – ரூ 15000, ரிஷிகேஷ்வ் – ரூ 12000, பரினா – ரூ 10000, அகிலன் – ரூ 10000, கண்மணி – ரூ 9000, செந்தில்குமாரி-ரூ5000. மேலும் அடுத்தகட்டமாக இந்த சீரியலில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை வெளியிடவிருப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.