பிரசவத்திற்கு பின் ரீ-என்ட்ரி கொடுக்கும் வெண்பா.. சூடுபிடிக்கும் பாரதிகண்ணம்மா சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடரில் வெண்பா கதாபாத்திரத்தில் வில்லியாக நடிப்பவர் நடிகை பரினா.

ஆரம்பத்தில் புதுயுகம் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். மேலும், இவர் சன் டிவியில் ஒளிப்பரப்பான அழகு என்ற தொடரில் நடித்தார். ஆனால் இவருக்கு மிகப்பெரிய புகழை ஏற்படுத்தி கொடுத்தது பாரதி கண்ணம்மா தொடர் தான்.

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பரீனா கர்ப்பமாக இருப்பதை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தார். அவர் கர்ப்பமாக இருக்கும் போது வெளியிட்ட புகைப்படங்களும், அவர் செய்யும் ஜிம் ஒர்க்கவுட்களும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

பரினா குழந்தை பிறக்கும் போகும் சில நாட்களுக்கு முன்பு வரை சீரியலில் நடித்துக் கொண்டு இருந்தார். பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்த நடிகை ரோஷினி மாற்றப்பட்டது பிறகு மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. இந்நிலையில் வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் பரீனாவிற்கும் ஆண் குழந்தை பிறந்தது. இதனால் அவரும் சீரியலில் நடிக்க முடியவில்லை.

தற்பொழுது குழந்தை பிறந்த சில வாரங்களே ஆன நிலையிலும் மீண்டும் பாரதி கண்ணம்மா சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். இவ்வளவு சீக்கிரம் கம்பக் கொடுப்பார் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்றும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என வெண்பா ரசிகர்கள் புகழ்ந்து உள்ளார்கள்.

venba-bharathikannama
venba-bharathikannama

இப்போதுதான் பாரதிகண்ணம்மா தொடரில் கோர்ட் ஆர்டர் படி பாரதியும், கண்ணம்மாவும் சேர்ந்து வாழ தொடங்கியுள்ளார்கள். இந்நிலையில் வெண்பாவின் என்ட்ரியில் பாரதிகண்ணம்மா தொடர் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்