fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

முருங்கைக்காய் சாப்பிட்டும் துரோகத்தை மறக்காத பாரதி.. ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க துப்பில்ல இதெல்லாம் ஓவர்

bharathikannamma

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முருங்கைக்காய் சாப்பிட்டும் துரோகத்தை மறக்காத பாரதி.. ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க துப்பில்ல இதெல்லாம் ஓவர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது சற்று தூக்கலான ரொமான்ஸில் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் கண்ணம்மாவின் வீட்டில் தங்கியிருக்கும் பாரதியை சுற்றியிருக்கும் அனைவரும் வித விதமாக டார்ச்சர் செய்கிறார்கள்.

அது தொடர்பான ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் டாக்டர் பாரதி, கண்ணம்மாவின் வீட்டுக்கு அருகில் இருக்கும் வயதானவர்களுக்கு வைத்தியம் பார்க்கிறார். அதில் ஒரு பாட்டி டாக்டருக்கு கொடுக்க காசில்லாமல் தன் கையில் இருந்த பூவை கொடுத்துவிட்டு செல்கிறார்.

பூவைப் பார்த்து அதிர்ச்சியாகவும் பாரதி என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டுக்கு வந்து அதை அப்படியே வைக்கிறார். எதேச்சையாக அங்கு வரும் நிஷா அந்த பூவை எடுத்து கண்ணம்மாவிடம் உன் வீட்டுக்காரர் ஆசையா வாங்கிட்டு வந்துருக்காரு என்று கூறி அதை கண்ணம்மாவின் தலையில் வைக்கிறார்.

கண்ணம்மாவை தலையில் பூவுடன் பார்த்த பாரதி நொந்து போய் நிற்கிறார். இதை அறியாத கண்ணம்மா, பாரதியைப் பார்த்து ஒரு மார்க்கமாக சிரித்தபடி செல்கிறார். அப்போது வீட்டிற்கு வரும் நிஷா ஒரு பெரிய டிபன் கேரியரை எடுத்துவந்து பாரதியிடம் கொடுத்து உங்களுக்கு சமைத்தது சாப்பிடுங்கள் என்று வில்லங்கமாக கூறி விட்டு செல்கிறார்.

அதில் என்ன இருக்கிறது என்று பார்த்தால் அத்தனையும் முருங்கைக்காய் சம்பந்தப்பட்ட சாப்பாடு. அது அனைத்தையும் மிச்சம் வைக்காமல் சாப்பிடும் பாரதியை கண்ணம்மா இவ்வளவு சாப்பிட கூடாது என்று எச்சரிக்கிறார். ஆனாலும் கேட்காத பாரதி முழு சாப்பாட்டையும் காலி செய்து விடுகிறார்.

அவ்வளவு முருங்கைக்காய் சாப்பிட்ட புண்ணியத்தில் பாரதி, கண்ணம்மாவை குறுகுறுவென்று பார்க்கிறார். அப்பொழுதுதான் டாக்டருக்கு கண்ணம்மா மேல் தான் கோபமாக இருப்பது நினைவுக்கு வருகிறது. அதனால் பாரதி, நீ செய்த துரோகத்தை நான் மறக்கவே மாட்டேன் என்று புலம்பியபடி கட்டிலில் அமர்ந்து இருக்கிறார்.

இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த சீரியல்களில் முருங்கைக்காய் சமாச்சாரத்தை வைத்து ஓட்டுவார்கள் என்று தெரியவில்லை. கடந்த சில நாட்களாக பாரதி கண்ணம்மா சீரியலில் வரும் ப்ரோமோ எல்லாம் ஒரு மார்க்கமாகவே இருக்கிறது. சீக்கிரம் வெண்பாவை சீரியலுக்கு கொண்டு வாங்க, இதுங்க ரெண்டு பேர் தொல்லையும் தாங்க முடியல என்று ரசிகர்கள் நொந்து கொள்கின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top