பாரதியை வச்சு செய்யும் கண்ணம்மா.. டிஎன்ஏ டெஸ்ட் எடுக்காமலேயே சீரியலை ஓட்டும் இயக்குனர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ரசிகர்களால் அதிகம் கலாய்க்க பட்டாலும் டிஆர்பியில் முன்னணியில் இருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. கடந்த சில வாரங்களாகவே விறுவிறுப்பாக ஒளிபரப்பாகும் இந்த சீரியல் தற்போது பல எதிர்பாராத சம்பவங்களுடன் ஒளிபரப்பாக உள்ளது.

தனக்கு ஒரு குழந்தை பெறும் தகுதி இல்லை என்பதால், கண்ணம்மாவை சந்தேகப்பட்டு வீட்டை விட்டு விரட்டும் பாரதி அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். தற்போது கோர்ட் உத்தரவுப்படி இருவரும் ஒரே வீட்டில் ஆறு மாதம் சேர்ந்து வாழ ஆரம்பிக்கின்றனர்.

இதனால் இருவருக்கும் இருக்கும் இடைவெளி தற்போது குறைந்து வருகிறது. இருப்பினும் பாரதிக்கு கண்ணம்மாவின் மீது இருக்கும் அந்த சந்தேகம் மட்டும் இன்னும் தீரவில்லை. ஒரு கட்டத்தில் இதை பொறுக்க முடியாத கண்ணம்மா பாரதியைப் பார்த்து ஆவேசமாக பேசும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அதில் இத்தனை வருடமாக தனியாக வாழும் எனக்கு இனியும் தனியாகவே வாழ தெரியும். ஆனால் ஒரு முறை கூட என் மேல் எந்த தப்பும் இருக்காது என்று உனக்கு தோணவே இல்லையா. இதுவரைக்கும் மாறாத நீ எப்பவும் மாறப்போவது இல்லை.

மற்றவர்களை காயப்படுத்தி அதுல சந்தோஷப்படுவதில் உங்களை அடிச்சுக்க யாரும் இல்லை. ஆனால் என் வாழ்க்கையில் நான் கணவனாக ஏற்றுக் கொண்டது உன்னை மட்டும் தான். எனக்கு நீ மட்டும் தான் ஹீரோ நம்பினால் நம்பு இல்லாட்டி போ என்று கோபமாக சொல்கிறார்.

கண்ணம்மாவின் இந்த அதிரடியான பேச்சால் பாரதி என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறிய படி நிற்கிறார். இந்த காட்சிகள்தான் இன்று இரவு பாரதி கண்ணம்மாவில் ஒளிபரப்பாக இருக்கிறது. என்னதான் இப்படி அதிரடியான காட்சிகள் இருந்தாலும் பாரதி மாற போவதும் இல்லை, அந்த டிஎன்ஏ டெஸ்ட்டை எடுக்க போவதுமில்லை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்