டிஆர்பி-யில் டாப் 5 இடத்தைப் பிடித்த சீரியல்கள்.. அரைத்த மாவையே அரைத்துக் கல்லா கட்டும் விஜய் டிவி

சின்னத்திரை ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை அந்த வார டிஆர்பி ரேட்டிங்கை வைத்து தெரிந்து கொள்ளலாம். அந்தவகையில் இந்த வாரம் வெளியான விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் இடத்தை பிடித்து பாரதிகண்ணம்மா சீரியல் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. இதில் இந்த வாரம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அதிரடி திருப்பங்களை வரிசையாக அரங்கேற்றி சின்னத்திரை ரசிகர்களை பாரதிகண்ணம்மா சீரியல் எளிதாக கவர்ந்துவிட்டது.

இதைத்தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியல் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. கோபி-ராதிகா இருவரின் உறவை பாக்கியலட்சுமி வீட்டில் இருப்பவர்களுக்கு தெரிந்துவிடுமா இல்லையா என்ற பரபரப்புடன் ரசிகர்களை இந்த வாரம் முழுவதும் பாக்கியலட்சுமி சீரியலை பார்க்க வைத்திருக்கிறது. இதைத்தொடர்ந்து மூன்றாவது இடம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கும், 4-வது இடம் ராஜா ராணி2 சீரியலுக்கும் கிடைத்துள்ளது.

அதேபோன்று 5-வது இடம் தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு கிடைத்துள்ளது. இந்த சீரியல் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கும் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரின் திருமணம் நடக்கப்போகிறது. ஆனால் இந்த திருமணத்தை நிறுத்துவதற்கு தமிழின் அத்தை படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆகையால் தமிழின் திருமணம் சரஸ்வதி உடன் நடக்குமா நடக்காதா என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் இந்த சீரியலை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 6-வது இடம் மௌனராகம் சீரியலுக்கும், 7-வது இடம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட ஈரமான ரோஜாவே2 சீரியலுக்கும் கிடைத்துள்ளது.

இந்த சீரியலில் இடம்பெற்றுள்ள ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்களை ஈர்க்கிறது.வெகு சீக்கிரமாகவே சின்னத்திரை ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியலாக இந்த சீரியல் மாறிவிடும். அதேபோல் 8-வது இடம் தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியலுக்கும், 9-வது இடம் நாம் இருவர் நமக்கு இருவர் என்று சீரியலுக்கும் கிடைத்திருக்கிறது.

மேலும் விஜய் டிவியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் முத்தழகு, காற்றுக்கென்ன வேலி, பாவம் கணேசன், நம்ம வீட்டு பொண்ணு, வேலைக்காரன், செந்தூரப்பூவே, வைதேகி காத்திருந்தாள் ஆகிய சீரியல்கள் அடுத்தடுத்த இடத்தைப் பெற்றிருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்