Connect with us
Cinemapettai

Cinemapettai

bharathi-family

Tamil Nadu | தமிழ் நாடு

ஹேமாவுக்கு அம்மாவாக பாரதி காட்டப் போவது யார்? வாயடைத்து திகைத்து போன குடும்பம்

விஜய் டிவியில் இரண்டு வாரங்களாக பாரதிகண்ணம்மா மற்றும் ராஜா ராணி2 சீரியல்களில் மகா சங்கமம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் தற்போது ஹேமா மற்றும் லக்ஷ்மி இருவரின் பிறந்தநாள் விழாவை கொண்டாட இருக்கின்றனர்.

இதற்காக ஹேமா தன்னுடைய தந்தை பாரதியிடம் பிறந்தநாள் பரிசாக அவளுடைய அம்மாவை காட்ட சொல்கிறார். மகள் ஆசையாசையாய் கேட்டதால் அதை மறுக்க முடியாத பாரதி, அதற்கு ஒத்துக் கொண்டு ஹேமாவின் அம்மா முகத்தை வரைந்து காட்ட போகிறார்.

நிச்சயம் அது கண்ணம்மா முகமாக இருக்க வாய்ப்பில்லை. பாரதியின் கல்லூரி காதலி ஹேமாவின் முகம் போன்று வரைந்து இருப்பார். ’10 வருடங்களாக பெற்ற தாய் யார் என்பதை சொல்லாத பாரதி, இப்போது கண்ணம்மா தான் ஹேமாவின் தாயென்று சொல்லிவிடுவாரா’ என கண்ணம்மா ஏற்கனவே யூகித்துள்ளார்.

ஆனால் பாரதி வேறு ஒரு பெண்ணை மட்டும் ஹேமாவிடம் அம்மா என்று அறிமுகப்படுத்தினால் நிச்சயம் உங்க வீட்டில் ஒரு கொலை விழும் என்று சௌந்தர்யாவிடம் தன்னுடைய கோபத்தையும் ஆத்திரத்தையும் கண்ணம்மா வெளிப்படுத்தினார்.

இதனால் பாரதி எடுக்கும் முடிவு கண்ணம்மாவை ஆக்ரோசபடுத்தப் போகிறது. இது ஒருபுறமிருக்க சரவணன்-சந்தியா இருவருக்கும் திருமண நாள் என்பதால் சந்தியாவிற்கு சரவணன், சந்தியா பெயர் கொண்ட போலீஸ் சீருடையை பரிசாக அளிக்கிறார்.

அதைப் பார்த்து மெய்சிலிர்த்து போன சந்தியா, தன்னுடைய ஐபிஎஸ் கனவிற்கு முட்டுக்கட்டையாக இருந்த மாமியார் இனிமேல் உறுதுணையாக இருப்பார் என்ற நம்பிக்கையில் மேற்கொண்டு தீவிரமாக ஐபிஎஸ் ஆவதற்கு முழு முயற்சியையும் இனிவரும் நாட்களில் எடுக்கப் போகிறார்.

Continue Reading
To Top