கண்ணம்மா உடன் சேர்ந்து வாழ முடிவெடுத்த பாரதி.. சைடு கேப்பில் சொருகிய ஆப்பு

சின்னத்திரை ரசிகர்களுக்கு இஷ்டமான சீரியலான பாரதிகண்ணம்மா சீரியலில் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஏனென்றால் எட்டு வருடங்களாக பிரிந்து வாழ்ந்த பாரதி-கண்ணம்மா இருவரும் விவாகரத்துப் பெறுவதற்காக ஆறு மாதம் ஒரே வீட்டில் இருக்க முடிவெடுத்துள்ளனர். இதனால் ஒருவரை ஒருவர் மெல்ல மெல்ல புரிய ஆரம்பித்துள்ளனர்.

கடந்த வாரம் பாரதி நீதி காத்த அம்மன் முன்பு பொங்கல் வைத்து, கண்ணம்மா நிரபராதி என்று தெய்வம் தீர்ப்பளித்ததாக நம்பி கண்ணம்மாவை ஏற்றுக் கொள்ள துணிந்து விட்டார். எனவே இந்த வாரம் ஒளிபரப்பாகும் சீரியலில் அஞ்சலியின் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழாவிற்கு சௌந்தர்யாவின் வீட்டிற்கு வந்த பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒன்றாக கைகோர்த்து வீட்டிற்குள் நுழைகின்றனர்.

அப்போது சௌந்தர்யா ஆரத்தி எடுத்து ஆனந்தத்துடன் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரையும் வீட்டிற்குள் அழைக்கின்றனர். அதன் பிறகு அன்றைய தினம் கண்ணம்மா-பாரதி இருவருக்கும் திருமண நாள் என்பதால், பாரதியின் காலில் விழுந்து கண்ணம்மா ஆசீர்வாதம் பெறுகிறார். அப்போது பாரதி கணவனாக மதித்து என் காலில் விழுவதால் மனைவியாக உன்னை ஏற்றுக் கொள்கிறேன்.

அத்துடன் என்னுடைய அம்மாவிற்கு நல்ல மருமகள் ஆகவும், என்னுடைய மகளுக்கு நல்ல தாயாகவும், உன்னுடைய வருங்கால கனவு மற்றும் ஆசைகளை நிறைவேறும் விதத்தில் உன்னுடன் சேர்ந்து வாழ்கிறேன்.

ஆனால் அதற்கு முன்பு ஒரு கண்டிஷன் என்று பாரதி,கண்ணம்மாவிற்கு செக் வைக்கிறார். இது இன்னும் ஐந்து நாட்களில் ஒளிபரப்பாக உள்ளது என்று தற்போது புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

கண்ணம்மா உடன் வாழ முடிவெடுத்தாலும் அவருக்கு குழந்தை பெறும் பாக்கியம் இல்லாததால் கண்ணம்மாவை சந்தேகப் பார்வையுடன் பாரதி இன்று வரை பார்த்துக்கொண்டிருக்கிறார். ஒருவேளை பாரதி கண்ணம்மாவிடம், ‘உன்னுடைய குழந்தை யாருக்கு பிறந்தது என்று தெரியப்படுத்திய பிறகு என்னுடன் சேர்ந்து வாழலாம்’ என்று சொல்ல அதிகம் வாய்ப்பிருக்கிறது.

அப்படி இல்லை என்றால், ‘உன்னுடைய மகள் எனக்குப்பிடித்த பிறக்கவில்லை என்பதை ஒத்துக் கொள்’ என்று பாரதி,கண்ணம்மாவிடம் சொல்லலாம். எனவே இந்த இரண்டு கண்டிஷன்களில் ஏதாவது ஒன்றை சொல்லி மீண்டும் பாரதிகண்ணம்மா சீரியலில் இயக்குனர் குழப்பத்தை உருவாக்கி விடுவார்.

ஆனால் ஒரே ஒரு டிஎன்ஏ டெஸ்ட் மூலம் இந்த சீரியலில் குழப்பத்திற்கு தீர்வு காணலாம். ஆனால் அதை செய்தால் சீரியல் முடிந்துவிடும் என்பதால் அதை செய்ய மாட்டார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்