சூப்பர் ஹிட் படத்தை மிஸ் செய்து விடிய விடிய தேம்பித் தேம்பி அழுத பரத்.. ஐயோ பாவம்!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, இந்தப் பையன் எல்லாம் நல்லா வர வேண்டியவன், ஏன் இப்படி ஆனான்? என பலரும் பரிதாபப்படும் நிலைமைக்கு ஆளானவர் நடிகர் பரத். ஆரம்பத்தில் வெயில், எம்டன் மகன் என கவனிக்கப்படும் நடிகராகவும் மினிமம் கியாரண்டி நடிகராகவும் வலம் வந்தார்.

எங்கேயோ போற மாரியாத்தா என்மேல வந்து ஏறாத்தா என்ற கணக்காக நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தவரை யாரோ மாஸ் ஹீரோ ஆசை காட்டி அவரது பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டனர். இதில் இயக்குனர் பேரரசுவுக்கு கொஞ்சம் பங்கு உண்டு.

பேரரசு மற்றும் பரத் இருவரும் இணைந்து பணியாற்றிய படங்கள் அனைத்துமே படுதோல்வியை சந்தித்து பரத் மீதான நம்பிக்கையை இழக்க வைத்தது என்று சொன்னால் மிகையாகாது. அதன் பிறகு தற்போது வரை ஒரு பெரிய வெற்றிப்படம் கொடுக்க போராடி வருகிறார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்தாலும் அடுத்தடுத்து அவர் நடிக்கும் படங்கள் தான் அவரது அடுத்தகட்ட மார்க்கெட்டை நிர்ணயிக்கும் என்பதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒன்று. பரத்துக்கு எப்போதோ ஒரு விடிவு காலம் வந்திருக்க வேண்டியது.

ஆனால் எப்படி அதை மிஸ் செய்தார் என்பதுதான் தெரியவில்லை. இதுதான் நேரம் என்கிறார்களோ. மறைந்த இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கோ. இந்த படத்தில் முதன் முதலில் சிலம்பரசன் நடிக்கவிருந்தார்.

அவர் அந்த படத்திலிருந்து விலகிய நிலையில் அடுத்ததாக பரத்திடம் தான் கேட்டார்களாம். ஆனால் ஏனோ அவர் அந்த படத்தில் நடிக்க மறுக்க பின்னர் ஜீவா நடிப்பில் மாஸ் வெற்றி பெற்றது. அந்த படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானதை நினைத்து ஒரு நாள் விடிய விடிய தேம்பித் தேம்பி அழுதாராம் பரத்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்