Connect with us
Cinemapettai

Cinemapettai

மீசை இல்லாமல் ஹாலிவுட் ஹீரோ ரேஞ்சுக்கு மாறிய நடிகர் பரத்.. செம்ம வைரலாகும் மாஸ் புகைப்படம்

bharath-latest

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மீசை இல்லாமல் ஹாலிவுட் ஹீரோ ரேஞ்சுக்கு மாறிய நடிகர் பரத்.. செம்ம வைரலாகும் மாஸ் புகைப்படம்

பரத் 2003 ஆம் ஆண்டு பாய்ஸ் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து செல்லமே படத்தில் விஷாலுக்கு வில்லன் வேடத்திலும் நடித்து புகழ் பெற்றார்.

பிறகு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் ‘காதல்’ படத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதனைத்தொடர்ந்து எம்.மகன், பட்டியல், ஐந்து ஐந்து ஐந்து, ஆகிய படங்களின் மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிக்காட்டி இருந்தார்.

தற்போது சில படங்கள் சரியாகப் போகாத நிலையில் மலையாளம் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். பரத்துக்கு திருமணமாகி இரட்டை குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர் வித்தியாசமான கதைகளில் நடித்தாலும் ஒரு ஹிட் கூட கொடுக்க முடியாமல் தொடர்ந்து தமிழ்சினிமாவில் தடுமாறி வருவதால் மலையாள பக்கம் சென்றுள்ளார். எப்படியோ தட்டுத்தடுமாறி காளிதாசன் படத்தின் மூலம் உயிர் கொடுத்து மீண்டும் தமிழ் சினிமாவில் நான் இருக்கிறேன் என மணி அடித்துள்ளார்.

பாலிவுட்டில் கேட்ட சல்மான்கானுடன் ஒரு படம் நடித்து விட்டார் பரத். இந்நிலையில் இவரது கட்டுமஸ்தான உடலை வைத்து மீசை இல்லாமல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

barath-cinemapettai

barath-cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top