Connect with us

Videos | வீடியோக்கள்

மனைவியை கொலை செய்யும் பரத்.. அதிலிருந்து தப்பிக்க உச்சகட்ட பயத்தை காட்டிய லவ் டீசர்

இரண்டாவது முறையாக இணையும் பரத், வாணி போஜன் நடித்த லவ் படத்தின் டீசர் வெளிவந்து வைரலாகி வருகிறது.

bharath-vanibhojan-love-movie-teaser

தமிழ் சினிமாவில் நடிகர் பரத் நடித்த காதல், எம்டன் மகன் உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்த நிலையில், சில படங்களின் தோல்வியால் பல வருடங்களாக படவாய்ப்புகள் இன்றி இருந்துள்ளார். இதனிடையே தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் வகையில் தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மிரள் திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் த்ரில்லிங்காக ரிலீசாகி வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தை இயக்குனர் சக்திவேல் இயக்கிய நிலையில் பரத், வாணிபோஜன் உள்ளிட்ட பலர் நடித்திருப்பர். கதாநாயகியாக வலம் வரும் வாணிபோஜனின் சொந்த ஊருக்கு செல்லும் வழியில் ஏற்படும் மர்மமான விஷயங்களிலிருந்து எப்படி இருவரும் தப்பித்து வெளி வருகிறார்கள் என்பதே இத்திரைப்படத்தின் கதை ஆக அமைந்தது.

Also Read : பரத் கேரியரை தூக்கி விட்ட 5 படங்கள்…. பைத்தியக்கார முருகனாக மாறிய கதாபாத்திரம்

தம்பதிகளாக இருவரும் மிரள் படத்தில் நடித்த நிலையில், வாணிபோஜன், பரத் ஜோடி பேசப்பட்டது. இதனிடையே மீண்டும் இருவரும் தமபதிகளாக இணைந்து லவ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். அண்மையில் இப்ப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. மலையாளத்தில் 2020ஆம் ஆண்டு இயக்குனர் காலித் ரஹ்மான் இயக்கத்தில் ரஜிஷா விஜயன், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் சக்கைபோடு போட்டது.

காதலித்து திருமணம் செய்த தன் மனைவியை ஏதோ ஒரு பிரச்சினையில் கொலை செய்து விடுகிறார் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்ன செய்கிறார் என்பது இந்த படத்தின் கதையாக தெரிகிறது இது மிகவும த்ரில்லிங்கா வந்துள்ளது. தொடர்ந்து இந்த ஜோடி திரில்லிங்கான படத்தில் நடிப்பது இரண்டாவது முறையாகும்.
பரத்தின் 50-வது திரைப்படமாக இப்படம் ரிலீசாக உள்ளது.

Also Read : ஜெய், வாணிபோஜன் நெருக்கமான ரொமான்ஸ், (18+) வசனங்கள்.. TRIBLES வெப் சீரிஸ் விமர்சனம்

தமிழில் வெளியான இப்படத்தின் டீசரில் த்ரில்லிங் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே பரத், வாணிபோஜன் இந்த ஜோடி தொடர்ந்து திரில்லிங்கான படத்தில் நடித்து வருவதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு
அதிகரித்துள்ளது. மேலும் இப்படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் அதிகமாக இடம்பெறும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ஆர்.பி பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் 2023 ஆம் ஆண்டு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. லவ் திரைப்படமும் மிரள் படத்தை போல் வெற்றியடைந்தால் பரத் மற்றும் வாணிபோஜன் ஜோடி இணைந்து தொடர் திரைப்படங்களில் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Also Read : அஞ்சு வருஷம் ஒருத்தர் கூடவே சுத்துறது ஒரு வாழ்க்கையா.? வெளிப்படையாக உண்மையை கூறிய வாணி போஜன்

Continue Reading
To Top