பானுப்ரியா  1980-ல் இருந்து 1993 வரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர். இவர் 1990-களில் சில ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
பானுப்ரியா பல மொழிகளில் சுமார் 111-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

bhanupriya

இவர் தெலுங்கில் 55 திரைப்படங்களிலும், தமிழில் 40-க்கும் மேற்பட்டத் திரைப்படங்களிலும், 14 ஹிந்தி திரைப்படங்களிலும் மற்றும் சில மலையாள மற்றும் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

bhanu priya

இவர் தனது 17-வயதில்  நடிக்க ஆரம்பித்தார். இவருடைய முதல் தமிழ்த் திரைப்படம், மெல்ல பேசுங்கள் 1983-ம் ஆண்டு வெளியானது. பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கியதால், பெரும்பாலான இவருடையத் திரைப்படங்களில் நடனமாடும் கதாப்பாத்திரமாகவே அமைந்தது. இவருடைய நடிப்பும் நடனமும் சக கலைஞர்களால் பாராட்டப்பட்டது.

bhanupriya

இவர் தற்போது பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார். இவர் தன்னுடைய கண்களால் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் சிறந்து விளங்கினார்.

Bhanupriya

அமரிக்காவைச் சேர்ந்த விருதுபெற்ற புகைப்படக்கலைஞரும், பிரபல பரதநாட்டிய கலைஞரான சுமதி கவுசலின் மகனுமான ஆதர்ஷ் கவுசல், என்பவரை பானுப்ரியா திருமணம் செய்து கொண்டார் பின்பு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தும் பெற்றார்கள். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள் அவரின் பெயர் அபிநயா . தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கலிபோர்னியாவில் உள்ள  லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வந்த ஆதர்ஷ் கடந்த 20ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.