புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

நடிகையை அடிக்க போன பாக்யராஜ்.. படப்பிடிப்பில் இருந்து தலைதெறிக்க ஓடிய நடிகை!

தமிழ் சினிமாவில் சிறந்த திரைக்கதை அமைப்பாளர் என்ற பெயரை எடுத்து உள்ளவர் பாக்கியராஜ். கூச்சப்படும் விஷயங்களைக்கூட ரசிக்கும்படி சொல்வதில் கெட்டிக்காரர். பெண்களை வைத்து பெண் ரசிகர் பட்டாளத்தை தனக்கென உருவாக்கிக் கொண்டவர். இவருடைய படங்கள் செய்த சாதனைகள் ஏராளம்.

பாக்கியராஜ் தன்னுடைய காலகட்டங்களில் மிகச்சிறந்த படங்களை கொடுத்துள்ளார். மேலும் பல நடிகைகளை அறிமுகப்படுத்தி உள்ளார். ஆனால் பாக்யராஜை கண்டாலே எனக்கு பிடிக்காது என பிரபல நடிகை ஒருவர் பேட்டி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாக்கியராஜ், பாரதிராஜா , பாலா போன்ற இயக்குனர்கள் தங்களது படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் சரியாக நடிக்கவில்லை என்றால் படப்பிடிப்பு தளத்திலேயே திட்டுவது அடிப்பது போன்றவற்றை செய்வது வழக்கம் தான். அந்த காட்சியின் தன்மை புரியாமல் நடிகர்-நடிகைகள் ஏதேனும் தப்பு செய்தால் கோபம் வருவது இயக்குனருக்கு சகஜம்தானே.

அப்படி தூரல் நின்னுபோச்சு படத்தில் நடித்த சுலோச்சனாவை ஒரு காட்சியில் சரியாக நடிக்கவில்லை என கண்டபடி திட்டி அடிக்க கையோங்கிய விட்டாராம். இதனால் அழுது கொண்டே படப்பிடிப்பு தளத்தை விட்டு கிளம்பி விட்டாராம் சுலோச்சனா. அதன்பிறகு படக்குழுவினர் அவரை சமாதானம் செய்து படத்தில் நடிக்க வைத்துள்ளனர்.

இப்போதுதான் நடிகைகளுக்கு இயக்குனர்கள் கூஜா தூக்கி கொண்டு இருக்கின்றனர். காரணம் அவர்களுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது அவரது ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வரவேண்டும் என்றால் நடிகைக்கு கூஜா தூக்க வேண்டும்.

ஆனால் அந்த காலத்தில் அப்படி கிடையாது. முன்னணி நடிகையாக இருந்தாலும் இயக்குனர் சொல்பேச்சு கேட்க அவர்களுக்கு ஏற்றபடி நடித்துக் கொடுத்தால் தான் இப்படத்தில் வேலையே.

- Advertisement -

Trending News