தெறி வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் இன்று (ஒருசில நாடுகளில்) வெளியாகியிருக்கும் படம் பைரவா. அழகிய தமிழ்மகன் என்ற தோல்வி படத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து பரதனுக்கு விஜய் மீண்டும் வாய்ப்புக் கொடுத்தபோது ரசிகர்கள் மட்டுமல்லாது பரதனே கொஞ்சம் அசந்து போனார். விஜய்யின் நம்பிக்கையை பரதன் இந்த முறையாவது காப்பாற்றினாரா? மினி விமர்சனத்தை படித்து தெரிந்து கொள்க:

(நாளைதான் படம் இந்தியாவில் வெளியாகிறது என்பதால் கதை இதில் குறிப்பிடவில்லை)

முதல்பாதியில் முதல் 45 நிமிடங்கள் விஜய் – சதீஷ் காமெடி மற்றும் விஜய் – கீர்த்தி சுரேஷ் ரோமான்ஸுக்கு ஒதுக்கியாச்சு. சொல்லப்போனால் இதற்கு பிறகுதான் கதையே ஆரம்பமாகிறது. கீர்த்தி சுரேஷ் சொல்லும் அந்த பிளாஷ்பேக் கொஞ்சம் நீளம்தான் என்றாலும் படத்தின் எமோஷனல் ஏரியாவை பதம்பார்க்கிறது.

இரண்டாம் பாதியில் இருந்து படம் விஜய்யின் கைக்குள். விஜய் ரசிகர்களுக்கு தேவையான அத்தனை மாஸ் விஷயங்களும் இரண்டாம் பாதியில் அனல் பறக்கும் வசனங்களுடனும் சந்தோஷ் நாராயணனின் மிரட்டலான பின்னணி இசையையும் சேர்த்து கமர்ஷியல் விருந்து கொடுத்திருக்கிறார் பரதன். குறிப்பாக அந்த கிரிக்கெட் ஃபைட் சீன், நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு டிரென்ட் செட்டாக அமையும். கொஞ்ச நேரமே வந்தாலும் வழக்கம்போல ரசிக்க வைக்கிறார் மொட்டை ராஜேந்திரன்.

ஆங்காங்கே சில பல குறைகள் இருந்தாலும் ஒரு நல்ல மெசேஜை மாஸ் கமர்ஷியல் என்டர்டெய்னராக கொடுத்ததில் பாஸ் ஆகியிருக்கிறார் பரதன். ஆகமொத்தம், விஜய்யின் நம்பிக்கையை மட்டும் அல்ல அவரது ரசிகர்களின் நம்பிக்கையையும் சேர்த்து காப்பாற்றியிருக்கிறார் பரதன்.