Tamil Cinema News | சினிமா செய்திகள்
பைரவா படம் எப்படி இருக்கு? – வெளிநாட்டு விமர்சனம்
பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்ப ஒரு சில நடிகர்களால் தான் முடியும். அந்த வகையில் தெறி என சரவெடி வெற்றியை கொடுத்த இளைய தளபதி, மீண்டும் கமர்ஷியல் உலகின் கிங் என்று நிரூபிக்க பரதனுடன் கைக்கோர்த்துள்ள படம் பைரவா.
நாளை உலகெங்கும் வெளியாகும் இப்படத்தை சிறப்பு காட்சியை பார்த்த நிருபரின் விமர்சனம் இதோ உங்களுக்காக.
பேங்கில் லோன் கலெக்ட் பண்ற விஜய்க்கு அம்மா, அப்பா யாரும் இல்லை, நண்பர் சதிஷ் கூடவே வருகிறார். loan வாங்கிட்டு அத திரும்பி கட்டாம அந்த bank manger கிட்ட பிரச்சனை பன்னுராங்க ரவுடிகள் இத bank manger மூலமா தெறிஞ்சுகிட்டு வரலாம் வரலாம் வா பைரவா சந்தோஷ் நாராயணன் பிஜிஎம்முடன் விஜய் அந்த ரவுடிகளை அடிச்சு பணத்த திரும்ப வாங்குறாரு.
பின்னர் கீர்த்தி சுரேஷை கண்டதும் காதலில் விழும் விஜய் தன்னுடைய மேனஜர் மகளின் திருமணத்தில் ஆடி வருகிறார். பின்னர் கீ்ர்த்தியிடம் காதலை சொல்ல வரும் போது ஒரு கும்பல் அவரை கொல்ல முயற்சிக்கின்றது.
பின்னர் ப்ளாஸ்பேக்கில் முறையான வசதிகள் இல்லாத கல்லூரிக்கெதிராக போராடும் கீர்த்திக்கு நடக்கும் அநியாயங்களை தெரிந்து அதற்காக விஜய் எடுக்கும் ரிவெஞ்சே பைரவா படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்..
விஜய்யின் அறிமுக காட்சியே சைக்கிளில் எண்ட்ரி கொடுக்கிறார். தன்னுடைய வழக்கமான துறுதுறு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இளமையாக காட்சியளிக்கிறார்.
கடைசி வரைக்கும் கீர்த்தி சுரேஷின் இலட்சியத்திற்க்காக போராடுகிறார்.
கீர்த்தி சுரேஷை சுற்றி கதை நகருவதால் படம் முழுக்க வலம் வருகிறார். சதீஷின் காமெடி ரசிக்க வைக்கிறது. தம்பி ராமைய்யா, மொட்டை ராஜேந்திரன் காமெடி சுமார் ரகம்.
க்ளாப்ஸ்..
அனைத்து பாடல்களும் சிறப்பாக உள்ளது. அதிலும் வரலாம் வரலாம் வா தீம் பாடல் சூப்பர்
இந்தியாவில் உண்மையில் பெண்களுக்கு நடக்கும் கொடூரங்களை, முழுமையாக படம் முழுவதும் கூறியுள்ளது.
பல்ப்ஸ்
வீதியில் விஜய் பைக்கில் செல்லும் கட்சிகளின் போது backround சேர்ந்து செல்கின்றமை படத்திற்கு இன்னொரு வீழ்ச்சி.
அங்கங்க கபாலியில் ரஜினிகாந்த் கூறியதை போல சிறப்பு என விஜய் அடிக்கடி கூறுவது.
கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் நடனமாடுவதக்கு கொஞ்சம் கஷ்டப்படுறாங்க. திரைக்கதை வலுவில்லாமல் இருக்கிறது.
மொத்தத்தில் பைரவா குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்.
