பெரிய அளவு முதலீடு. பெரிய அளவுக்கு லாபம் என்கிற வகையில், விஜய் படத்திற்கு எடுக்கிற ரிஸ்கும் சரி… ரிவார்டும் சரி. பெரிதாகவே இருக்கும். சமயத்தில் சறுக்கிவிட்டால் கூட அதிகம் சேதாரமில்லாமல் தப்பிவிடும் விநியோகஸ்தர்களுக்கு ஒரே கவலை… படத்திற்கு U தருவார்களா, A தருவார்களா என்பதுதான்.

இவர்களின் சந்தோஷத்தை கெடுக்கிற ஒரே சக்தி, அந்த சென்சார் சர்டிபிகேட்டுக்குதான் உண்டு. A, அல்லது U/A வழங்கப்பட்டால் படத்திற்கு வரிவிலக்கு கிடைக்காது. வருகிற கலெக்ஷனில் சுமார் 30 சதவீதத்தை அதற்கே தந்து அழ வேண்டும்.

சரி… பைரவா பஞ்சாயத்து என்னவாம்? வியாபாரத்தை துவங்கிவிட்ட இந்த நிலையில் படத் தரப்பிலிருந்து ஒரு விஷயம் வலியுறுத்தப்பட்டு வருகிறதாம். “இந்த படத்திற்கு யு கிடைக்கும்னு எங்களுக்கு தோணல. ஒருவேளை படத்திற்கு U/A கிடைத்தால், அந்த நேரத்தில் வந்து பேசிய தொகையை குறைக்கிற வேலை வச்சுக்கக்கூடாது. ஏற்கனவே விஜய் படங்களுக்கு நீங்க கடைசி நேரத்தில் வந்து டார்ச்சர் கொடுத்திருக்கீங்க. அதை இந்த முறை அனுமதிக்க முடியாது” என்று கூறிவிட்டார்களாம் திட்டவட்டமாக.