fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பைரவா வியாபாரமும், எதிர்பார்க்கும் வசூலும், நடக்குமா ?

bhairavaa trailer

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பைரவா வியாபாரமும், எதிர்பார்க்கும் வசூலும், நடக்குமா ?

தெறி படத்தின் வியாபாரமும், வசூலும் பைரவா படத் தயாரிப்பில் கூடுதலான செலவு செய்யக் காரணமாக அமைந்தது. விஜய் ரசிகர்களைக் கவரும் விதத்தில் முழுமையான ஆக்ஷன் படமாக மட்டுமே பைரவா படம் இருக்க வேண்டும் என முடிவெடுத்து அதற்கேற்றபடி படத்தையும் முடித்துவிட்டனர். தெறி படத்தின் வியாபாரத்தையும் தாண்டி பைரவா படம் வியாபாரம் ஆகியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 50 கோடி ரூபாய் வரை இந்தப் படம் வியாபாரம் ஆகியுள்ளதாகச் சொல்கிறார்கள். அப்படியென்றால் அந்த வியாபாரத் தொகையை வசூலாகப் பெற சுமார் 80 கோடி ரூபாய் வரை படத்திற்கு வசூல் கிடைக்க வேண்டும். பைரவா படப்பிடிப்பின் கடைசி கட்டத்தில் டிமானிடைசேஷன் காரணமாக வியாபாரம் அனைத்துமே கணக்கில் வரும் விதத்தில்தான் நடந்துள்ளதாம். அதனால், படத்திற்கு ஆகும் வசூல் தொகையும் அப்படியே கணக்கில்தான் வரும்.

மேலும் கபாலி படம் போல 500, 1000, 2000 ரூபாய் என விருப்பம் போல டிக்கெட்டை விற்க முடியாது. அரசு நிர்ணயித்த கட்டணத்தில் மட்டுமே டிக்கெட் கட்டணத்தை வைக்க முடியும். அதனால் பைரவா படம் 80 கோடி ரூபாயை வசூல் செய்ய வேண்டுமென்றால் எத்தனை நாட்கள் ஓட வேண்டும். குறைந்த பட்சம் 600 தியேட்டர்களில் தமிழ்நாட்டில் வெளியிடலாம்.

தெறி படம் தமிழ்நாட்டில் சுமார் 400 தியேட்டர்களில் வெளியாகி சுமார் 13 கோடி ரூபாய் அளவில் வசூலித்தது. அந்த வசூலின் அடிப்படையில் பார்த்தால் பைரவா படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக குறைந்தபட்சம் 6 நாட்களாவது ஓட வேண்டும். அப்போதுதான் எதிர்பார்க்கும் வசூலைப் பெற முடியும். அதற்கு வேறு எந்தப் படங்களும் போட்டிக்கு வரக் கூடாது.

அதனால், பொங்கல் தினத்தில் மேலும் சில படங்கள் வருவதைத் தள்ளிப் போட பைரவா குழுவினர் கேட்டு வருகிறார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top