vijay-record

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் ஏரியா வாரியான தமிழக உரிமை மட்டும் ரூ. 51 கோடிக்கு விலைப்போய் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது ரஜினி படங்களுக்கு இணையான வியாபாரம் என்பது குறிப்பிடத்தக்கது.