கோபியின் குறுக்கு புத்தியால் பாக்யாவிற்கு வரப் போகும் பிரச்சனை.. ராதிகாவுடன் ரொமான்ஸ் பண்ணும் அங்கிள்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கதை எதுவும் இல்லாமல் அரைச்ச மாவையே அரைப்பது போல் ரிப்பீட் மூடில் கதை நகர்ந்து கொண்டு வருகிறது. அதாவது சம்பந்தமே இல்லாமல் பாக்கியா மீது கோபப்படும் கோபி, அப்பாவின் இறப்புக்கு பிறகு நடந்த அவமானத்தை துடைக்கும் விதமாக பாக்யாவை பழிவாங்க முயற்சி எடுக்கிறார்.

கோபிக்கு தெரிந்த ஒரு நபரை பாக்கியா ஹோட்டலில் வேலை பார்க்கும் செப்பாக அனுப்பி வைக்கிறார். அதை நேரத்தில் பாக்கியா அந்த நபரை தேர்வு செய்து விடுகிறார். பிறகு ஹோட்டலை இன்னும் விரிவு படுத்த வேண்டும் என்பதற்காக பல்க் ஆர்டரை எடுக்கலாம் என்று பழனிச்சாமி ஐடியா கொடுக்கிறார். அதன்படி நடக்கப்போகும் இந்த ஒரு பல்க் ஆர்டரில் கோபி சொல்வது படி அந்த செஃப் பல தில்லாலங்கடி வேலையை பார்த்து கோபிக்கு பிரச்சினையை ஏற்படுத்தி விட வாய்ப்பு இருக்கிறது.

பாக்யாவிற்கு பக்கபலமாக இருக்கும் பழனி

இதற்கிடையில் ராதிகா, கோபி, மயூ அனைவரும் செஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது மகளுக்காக சப்போர்ட் பண்ணி கோபி விளையாண்டு கொடுக்கிறார். இதை பார்த்த ராதிகா என்னைவிட உங்களுக்கு மையு மேல தான் பாசம் அதிகம் என்று சொல்கிறார். அதற்கு கோபி உன் மீதும் எனக்கு அதிக பாசம் இருக்கிறது என்று சொல்லி ராதிகாவுடன் ரொமான்ஸ் பண்ண ஆரம்பித்து விடுகிறார்.

பல பிரச்சினைகளுக்கு பிறகு இப்பொழுது தான் நம் மனம் விட்டு பேசி இந்த மாதிரி புரிதலுடன் இருக்க முடிகிறது என்று ராதிகா மற்றும் கோபி பேசி கொள்கிறார்கள். இதனை அடுத்து இனியா காலேஜில் நடக்க போகும் டான்ஸ் போட்டியில் கலந்து கொள்ள ஆடிஷனில் தேர்வாக வேண்டும் என்பதற்காக , டான்ஸ் பெர்பார்மன்ஸ் கொடுக்கிறார்.

இதில் எப்படியாவது தேர்வாகி வெற்றி பெற்று விட வேண்டும். அப்பொழுது தான் என் மீது ஏற்பட்ட அவமானத்தை துடைக்கும் விதமாக என் குடும்பத்திற்கு ஒரு கௌரவம் கிடைக்கும் என்று இனியா நினைக்கிறார். ஆனால் தற்போது எழில் வீட்டை விட்டு வந்த பிறகு அவருடைய வளர்ச்சியை பற்றி எந்தவித கதையும் காட்டாமல் கோபியின் குறுக்கு புத்தியும் பழிவாங்க எண்ணத்தையும் மட்டுமே தொடர்ந்து காட்டி வருகிறார்கள்.

ஆனால் என்ன பிரச்சனை கோபி, பாக்கியாவிற்கு கொடுத்தாலும் அதை எல்லாம் சுக்கு நூறாக உடைத்து பாக்யா ஜெயித்து காட்டி விடுவார். அதன் காரணம் பாரக்கியாவின் நண்பராக பழனிச்சாமி கூடவே இருந்து அனைத்து விஷயங்களுக்கும் உதவி செய்து வருகிறார். அதனால் வரப்போகிற பிரச்சினையையும் எதிர்கொள்ளும் விதமாக பாக்கியவுடன் பழனிச்சாமி கைகோர்த்து கோபிக்கு பதிலடி கொடுப்பார்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News