Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாக்யராஜ் அதிரடி அரசியல் அறிவிப்பு.! எந்த கட்சியில் இணைகிறார் தெரியுமா.?
எப்போ ஜெயலலிதா மறைந்தாரோ அன்றில் இருந்து தமிழ் நாட்டில் எதற்கு பஞ்சம் இருக்கோ இல்லையோ பரபரப்பிற்கு பஞ்சமே இல்லை.ஜெயலலிதா மறந்த பிறகு சசிகலா தலைமை தாங்கினார் ஆனால் சொத்துகுவிப்பு வழக்கில் அவர் கைதானார்.
பின்பு தினகரன் துணை பொதுச் செயலாளார் என கூறி தலைமை தாங்க முன்வந்தார் ஆனால் பிரிந்த ஓபிஎஸ்,ஈபிஎஸ் இணைந்து தினகரன் தலைமையோ அல்லது சசிகலா குடும்ப அரசியலையோ ஏற்க்க முடியாது என தினகரனை கழட்டி விட்டனர். இதனால் தினகரன் தனியாக செயல்பட்டு வந்தார் இதனால் அதிமுக கட்சியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
மேலும் நடிகர் கமல் தொலைகாட்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்கி தனது அரசியல் அறிவிப்பை தெரிவித்தார் மேலும் அது மற்ற கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
அவர் மட்டும் இல்லாமல் தலைவர் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என அனைவரின் கேள்வியாக இருந்தது ஆனால் அனைவரின் கேள்விக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் ரஜினி கடந்த வருடம் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டார்.
அதுமட்டும் இல்லாமல் ரஜினி மற்றம் என்ற அப்பிளிகேஷனை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.மறைந்த ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள் தினகரன் ஆதரவாளர்கள்,இப்படி தமிழ் நாடு அரசியல் விறுவிறுப்பாக போய்கொண்டு இருக்கிறது.
மேலும் தற்பொழுது பாக்கியராஜ் அரசியலுக்கு வருவேன் என அதிரடியாக அறிவித்துள்ளார்.பிரபல தனியார் இணையதளத்திடம் பேட்டி கொடுத்த அவர்,அரசியலில் இறங்கினால் அதிமுக உடன் தான் கூட்டணி வைப்பேன் என்றும்,
எம்.ஜி. ஆர் தொடங்கிய கட்சி தற்பொழுது பிரச்சனையில் இருக்கு அதனால் அவரின் பக்தனான நான் கட்ச்சியை வீழ்ச்சியடையாமல் என்னால் முடிந்த அளவிற்கு கடுமையாக உழைப்பேன்.
