Tamil Cinema News | சினிமா செய்திகள்
31 வருட இயக்குனர் வாழ்க்கையில் பாக்யராஜ் வடிவேலுவுக்கு வாய்ப்பு தராதது ஏன்? பின்னணி இதுதான்!
1979 ஆம் ஆண்டு வெளியான சுவரில்லா சித்திரங்கள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாக்கியராஜ். அதற்கு முன்பு சில படங்களில் சிறு சிறு வேடத்திலும் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்திருந்தார்.
முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததை தொடர்ந்து இயக்குனர் மற்றும் நடிகராக வலம்வந்தார். அது மட்டுமில்லாமல் பல படங்களுக்கு திரைக்கதை எழுதும் திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றினார்.
கிட்டத்தட்ட 31 வருடங்கள் இயக்குனராக இருந்த பாக்யராஜ் கடைசியாக தனது மகன் சாந்தனுவை வைத்து சித்து ப்ளஸ் டூ எனும் படத்தை இயக்கியிருந்தார். ஆனால் அந்த படம் அட்டர் பிளாப் ஆனது.
இது ஒருபுறமிருக்க முப்பத்தி ஒரு வருட சினிமா வாழ்கையில் பல நடிகர்களை அறிமுகப்படுத்தியுள்ள பாக்யராஜ் காமெடி ஜாம்பவானாக இருந்த வைகைப்புயல் வடிவேலுக்கு ஒரு படத்தில் கூட வாய்ப்பு தராதது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆம், வடிவேலு இதுவரை பாக்யராஜின் ஒரு படத்தில்கூட நடித்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் ஏன் என்ற கேள்வி அனைவரிடமும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
அதற்கான காரணம் என்னவென்றால் பாக்யராஜ் தனக்கென ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு தொடர்ந்து படங்களை இயக்கி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேசமயம் சொக்கத்தங்கம் படத்தில் கவுண்டமணி செந்தில் கூட்டணியையும் பயன்படுத்தியிருந்தார்.
அப்படியிருக்க அவர் ஏன் வடிவேலுவை மட்டும் இயக்கவில்லை என்ற காரணம் தெரியவில்லை. வடிவேலு காமெடியனாக வளர்ந்து வந்த நேரத்தில் பாக்யராஜ் படங்கள் இயக்குவதில் சொதப்பி கொண்டிருந்த காலகட்டம் எனவும் கூறப்படுகிறது.
அதுகூட ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார் சித்ரா லட்சுமணன். இவர் தனது டூரிங் டாக்கிஸ் யூடியூப் சேனல் மூலம் இந்த செய்தியை பகிர்ந்தார்.
