புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

மதிக்காத இளையராஜாவிடம் பாக்யராஜ் பண்ணிய தாஜா.. உச்சகட்ட பொறாமையில் இசை ஞானி

இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் தன்னுடைய அற்புதமான படைப்புகள் மூலம் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்தார். சுவர் இல்லாத சித்திரங்கள், முந்தானை முடிச்சு போன்ற பல திரைப்படங்கள் அவருடைய திறமைக்கு உதாரணமாக இருக்கிறது.

70களில் பிற்பகுதியில் ஆரம்பித்த அவருடைய திரைப்பயணம் 80 காலகட்டத்தில் உச்சியில் இருந்தது. அந்த வகையில் அவர் இயக்கத்தில் வெளிவந்த அத்தனை திரைப்படங்களும் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. ஃபேமிலி ஆடியன்ஸ் உட்பட அத்தனை ரசிகர்களும் அவருடைய படங்களை கொண்டாடினர்.

Also read:பாக்யராஜ் ஸ்டைலில் அமையாத ஒரே படம்.. சில்வர் ஜூப்ளியை மிஸ் செய்த திரைக் காவியம்

இப்படி கிடுகிடுவென உயரத்திற்கு வந்த அவருடைய வளர்ச்சி இசை ஞானி இளையராஜாவுக்கு பிடிக்கவில்லையாம். இதற்கு காரணம் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட சிறு கருத்து வேறுபாடு தான். இளையராஜா, பாக்யராஜ் கூட்டணியில் இன்று போய் நாளை, வா தூரல் நின்னு போச்சு போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதைத்தொடர்ந்து இவர்களின் கூட்டணி வெற்றி கூட்டணியாக பார்க்கப்பட்டது. இருப்பினும் மன வருத்தத்தின் காரணமாக இளையராஜா பாக்யராஜின் முந்தானை முடிச்சு திரைப்படத்திற்கு இசையமைக்க முடியாது என்று மறுத்து விட்டாராம்.

Also read:வளர்த்துவிட்ட குருவுக்கே வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய பாக்யராஜ்.. வளர்த்த கெடா மார்பில் முட்டிய சம்பவம்

ஆனாலும் பாக்யராஜ் அவரை சமாதானப்படுத்துவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார். அவை அனைத்திற்கும் இளையராஜா முடியவே முடியாது என்று விடாப்பிடியாக இருந்துள்ளார். இதனால் யோசித்த பாக்கியராஜ் இளையராஜாவை தாஜா பண்ணும் வேலையில் இறங்கி இருக்கிறார்.

எப்படி என்றால் அவர் இரண்டு நாட்களாக இளையராஜாவின் வீட்டு வாசலிலேயே அவருடைய சம்மதத்திற்காக காத்திருந்தாராம். அதன் பிறகு தான் அவர் ஒரு வழியாக மலை இறங்கி இருக்கிறார். பின்பு படத்தின் வேலைகள் அனைத்தும் படு வேகமாக ஆரம்பிக்கப்பட்டது.

ஊர்வசி, பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்த அந்த திரைப்படம் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானது. இப்போதும் கூட அந்த படத்தை டிவியில் போட்டால் பார்க்காத ரசிகர்களே இருக்க முடியாது. மேலும் அந்த படத்தில் இடம்பெற்றிருந்த முருங்கைக்காய் காட்சி இப்போது வரை பிரபலமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read:முட்டி மோதிப் பார்த்த சாந்தனு.. நமக்கு என்ன வருதோ அதை செஞ்சுகிட்டு போயிட்டே இருக்கணும்!

- Advertisement -

Trending News