புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பாக்கியலட்சுமி ராதிகாவுடன் ரொமான்ஸ் செய்த கோபி..

பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த வாரத்திற்கான காட்சி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. பல நாட்களாக கோபி ராதிகாவுடன் இருக்கும் நட்பை தன் வீட்டிற்கு தெரியாமல் மறைத்து வருகிறார்.

தற்போது ராதிகாவுடன் கோபிக்கு இருக்கும் உறவு கோபியின் தந்தைக்கு தெரிவது போன்ற காட்சி வெளியாகியுள்ளது.  கோபியின் தந்தை கோவிலுக்கு வருகிறார். அங்கு கோபி யாரோ ஒரு பெண்ணுக்கு நெற்றியில் குங்குமம் வைப்பதை பார்த்து அதிர்ந்து நிற்கிறார்.

அந்தப் பெண் பாக்யாவின் பிரெண்ட் ராதிகா என்பதை பார்த்து மேலும் அதிர்ச்சி அடைகிறார். அப்பொழுது ராதிகாவின் மகள் ஸ்ருதியை கோபி பாசமாக அணைத்து முத்தமிடுவதையும் பார்க்கிறார்.

வீட்டில் அனைவரிடமும் ராமன் வேஷம் போடும் கோபியின் இந்த செயலை பார்த்து அவரது தந்தை நம்ப முடியாமல் நிற்கிறார். பின்னர் ஒரு முடிவுடன் அவர்களை நோக்கி செல்வது போல காட்சி முடிவடைகிறது.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல கோபியும் தன் தந்தையிடம் மாட்டிக்கொள்கிறார். ஏற்கனவே கோபியை பற்றி அவரது வீட்டில் வேலை செய்யும் செல்வி பாக்கியாவிடம் கூறியுள்ளார். ஆனால் அதை நம்பாத பாக்கியா தற்போது என்ன முடிவு எடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கோபி எப்பொழுது வீட்டில் மாட்டுவார் என்று ரசிகர்கள் பல நாட்களாக எதிர்பார்த்து வந்தனர். இப்பொழுது இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் முழு எபிசோடையும் காணும் ஆவலில் உள்ளனர். கோவிலில் மாட்டிக்கொண்ட கோபி

- Advertisement -

Trending News