நாம் பொதுவாக கோபி என்ற பெயர் சொன்னாலே எல்லோருக்கும் சட்டென்று ஞாபகம் வருவது பாக்கியலட்சுமி கோபி தான். இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பவரின் உண்மையான பெயர் சதீஷ். இவர் இதற்கு முன்னதாக பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்தாலும் இவரை சரியாகப் பயன்படுத்திக்கொண்டது விஜய் டிவிதான்.
பாக்கியலட்சுமி தொடரில் கோபியின் திருட்டுமுழிக்கே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆனால் நிஜத்தில் சதீஷ் மிகவும் ஜாலியான கேரக்டராம். இவரை பரிச்சயம் ஆக்கியது சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியல் தான். இந்த சீரியலில் சதீஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதை தொடர்ந்து சதீஷ் பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் வம்சம், திருமதிசெல்வம், குலதெய்வம் போன்ற சன் டிவி தொடர்களில் நடித்திருந்தார். இவர் வெள்ளித்திரையில் மின்சார பூவே படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து ஜெயம் ரவியின் தனி ஒருவன், இருமுகன் போன்ற படங்களில் சதீஷ் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். சதீஷ் சில விளம்பரங்களிலும் நடித்து உள்ளார். இந்நிலையில் சதீஷ் முதன்முதலாக நடித்த மந்திரவாசல் சீரியலின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
தற்போது ஹாண்ட்சமாக இருக்கும் கோபி தன்னுடைய இளமை காலத்தில் எப்படி இருப்பார் என்ற கேள்வி பலருக்கும் எழுந்து இருக்க வாய்ப்பிருக்கு. அவரது 90s காலகட்டத்தில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
அங்கிள் வயதில் இருக்கும் கோபி தற்போதே காதல் மன்னனாக வலம் வரும் நிலையில் தன்னுடைய பருவகாலத்தில் பல சில்மிஷங்கள் செய்து இருப்பார். ஏனென்றால் அவருடைய இளமைக் கால புகைப்படத்தில் அவ்வளவு ஹாண்ட்சமாக உள்ளார். இதனால் பல பெண்கள் அவருக்கு பிரபோஸ் செய்து இருக்க அதிக வாய்ப்புள்ளது.