விவாகரத்திற்கு பின் வீட்டிற்கே சென்ற பாக்யா.. துரத்தியடித்த எக்ஸ் புருஷன் கோபி

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி  ராதிகாவுடன் தொடர்பில் இருந்ததை தெரிந்ததும் பாக்யா, கொஞ்சம் கூட தயங்காமல் அவருக்கு விவாகரத்து கொடுத்து விட்டார். இதனால் குடும்பமே பாக்யாவின் மீது கோபத்தில் இருக்கும் நிலையில் விவாகரத்து ஆன பின்பு வீட்டிற்கு வரும் பாக்யாவை கோபி வீட்டிற்குள் வர விடாமல் தடுக்கிறார்.

மாமியார் ஈஸ்வரியும் மகன் கோபி செய்த தப்பை பெரிதுபடுத்தாமல், பாக்யாதான் விருப்பப்பட்டு விவாகரத்து வாங்கியது போல் குற்றவாளியைப் போல் நிற்க வைத்து திட்டுகிறார். கோபியும் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் உசுப்பேற்றி விட்டு பாக்யாவிற்கு எதிராக திருப்பி விடுகிறார்.

படு கேவலமாக நடந்து கொள்ளும் கோபியின் ஒவ்வொரு வார்த்தைக்கும் பதில் கொடுக்காமல் பாக்யா அமைதி காப்பது சீரியல் ரசிகர்களால் பார்க்கமுடியவில்லை. பாக்யாவை குடும்பமே சேர்ந்து திட்டுவதை கேட்டுக்கொண்டு நின்ற மகன் எழில், கோபியை சரமாரியாக திட்டுகிறார்.

‘இந்த வீட்டில் அம்மாவிற்கும் உரிமை உண்டு. உங்களுடன் மனைவியாக குடும்பம் நடத்தி மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்து அவர்களை வளர்ப்பது, சமைத்துக் கொடுப்பது, துணி துவைத்துக் கொடுப்பது என அனைத்து வேலையும் இவ்வளவு நாள் செய்த அவர்களுக்கும் இந்த வீட்டில் உரிமை உண்டு’ என எழில் அப்பாவை எதிர்த்துப் பேசுகிறார்.

ஒருகட்டத்தில் ‘உங்களைப் போன்று பெரிய வீடு, சின்ன வீடு என இரண்டு வீடு என்னுடைய அம்மா வைத்துக்கொள்ளவில்லை’ என எழில் அப்பாவை கேட்கக்கூடாத கேள்விகள் எல்லாம் கேட்டு பொங்கி எழுகிறார். அப்போது கூட பாக்யா பதில் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருக்கிறார்.

கோபி மறுபடியும் விவாகரத்து பெற்ற பிறகு, இந்த வீட்டில் பாக்யாவிற்கு உரிமை இல்லை என அவரை வீட்டை விட்டு துரத்தி அடிக்கிறார். இதன் பிறகு பாக்யா கோபியின் படு கேவலமான செயல்களை சுட்டிக் காண்பித்து வெளுத்து வாங்க போகிறார்.