தாத்தாவை நினைத்து பீல் பண்ணும் பாக்யா.. சைடு கேப்பில் வந்து ஆறுதல் சொல்லும் கோபியின் வில்லன்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், தாத்தா பாக்கியத்திடம் சொன்ன படி மற்றவர்களுக்காக நீ யோசித்து வாழ்ந்தது போதும். இனி உனக்கு என்ன வேண்டும் உன்னுடைய சந்தோசம் எது என்று உனக்கான வாழ்க்கையை வாழு என்று கடைசி நிமிஷத்தில் சொல்லிட்டு போனார். அது ரொம்பவே எதார்த்தமான ஒரு விஷயமாக தான் இருக்கிறது.

ஏனென்றால் என்ன தான் தற்போது பிள்ளைகளுடன் சுற்றி இருந்தாலும் கடைசியில் தனி மரமாக நிற்கும் பொழுது தனக்கான வாழ்க்கை வாழ தவறி விட்டோமோ என்ற நினைப்பு வந்துட்டு போகும். ஆனால் தற்போது ஈஸ்வரி, கணவரை நினைத்து ரொம்பவே பீல் பண்ணிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் பாக்கியவால் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாத ஒரு சூழ்நிலை.

ராதிகாவிடம் ஆறுதல் தேடும் கோபி

அதுமட்டுமல்லாமல் பாக்யாவை பொறுத்தவரை இந்த குடும்பம் தான் நம்மளுடைய உலகம். இதில் பிள்ளைகளை நல்லபடியாக செட்டில் பண்ண வேண்டும். மாமியாரை நல்ல பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டும்தான் பாக்கியா போராடி வருகிறார். ஆனால் இதை கெடுக்கும் விதமாக கோபி பல தில்லாலங்கடி வேலையை பார்க்கப் போகிறார்.

அடுத்ததாக ஈஸ்வரி, வீட்டில் தனியாக இருக்கும் பொழுது தாத்தாவை நினைத்து ரொம்பவே பீல் பண்ணி அழுகிறார். ஆறுதல் சொல்ல வந்த ஜெனி, ஈஸ்வரிடம் தன்மையாக பேசி எதார்த்தத்தை சொல்லி புரிய வைக்கிறார். ஆனால் ஈஸ்வரி, தாத்தாவின் என்பதாவது பிறந்த நாள் வீடியோவை போட சொல்லி வற்புறுத்துகிறார். அதை பார்த்ததும் இன்னும் ஈஸ்வரி அழ ஆரம்பித்து விடுகிறார்.

பிறகு செழியன் மற்றும் ஜெனி மறுபடியும் ஈஸ்வரியை சமாதானப்படுத்தி தாத்தவை நினைத்து வருத்தப்பட்டு பேசுகிறார்கள். அதே மாதிரி ஹோட்டலுக்கு போன பாக்கியாவும், இழந்து விட்டோம் என்ற துக்கத்திலேயே தாத்தாவை நினைத்து பீல் பண்ணுகிறார். அப்பொழுது சரியான நேரத்தில் பாக்யாவை ஆறுதல் படுத்தும் விதமாக பழனிச்சாமி வந்து விடுகிறார்.

ஏற்கனவே பழனிச்சாமி கண்டால் கோபிக்கு பிடிக்காது. தற்போது பாக்கியா எப்பெல்லாம் பிரச்சனையில் இருக்கிறாரோ, அப்பொழுதெல்லாம் பழனிச்சாமி வந்து விடுவதால் பழனிச்சாமியை ஒரு வில்லன் ரேஞ்சுக்கு கோபி பார்க்கிறார். ஆனால் இது எதையும் பற்றி கவலை கொள்ளாமல் பாக்யா தற்போது இக்கட்டான சூழலில் இருப்பதை தெரிந்துகொண்டு ஆறுதல் படுத்த பழனிச்சாமி அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறார்.

இதில் வேற ஒருதலைப் பட்சமாக பாக்கியவை நினைத்து பழனிச்சாமி காதலித்து வருகிறார். பழனிச்சாமி மனசுக்குள் என்ன இருக்கிறது என்று பாக்கியாவிற்கு ஓரளவுக்கு தெரிந்த பின்னும் இதை கண்டு கொள்ளாமல் பாக்கிய விட்டுவிட்டார். அடுத்ததாக கோபி மற்றும் ராதிகா பல மாதங்களுக்குப் பிறகு இப்பொழுது தான் சந்தோசமாக சிரித்து ஒருத்தரை ஒருத்தர் ஆறுதலுடன் பேசிக்கொள்கிறார்கள்.

அந்த வகையில் கோபி, ராதிகாவுடன் யார் என்னை விட்டுட்டு போனாலும் நீ என்னுடன் கடைசி வரை எனக்காக இருக்க வேண்டும் என்று கேட்கிறார். ராதிகா இது என்ன கேள்வி கோபி எப்போது நாம் இருவரும் ஒரே மாதிரி சந்தோஷமாக இருக்கலாம் என்று சொல்கிறார். ஆனால் தயவுசெய்து குடிக்கிற பழக்கத்தை மட்டும் விட்டு விடுங்கள். அது உங்களுக்கு மட்டுமல்லாமல் நம்முடைய குடும்பத்துக்கு மிகப் பெரிய பாதிப்பாக இருக்கும் என்று அக்கறையுடன் சொல்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News