புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

வாயில ஈ போவது கூட தெரியாமல் அண்ணாந்து பார்த்து கோபி.. பொளந்து கட்டிய பாக்யா

Baakiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடருக்கு தான் ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் இப்போது பாக்யா கெத்து காட்டும் படியான காட்சிகள் இத்தொடரில் அரங்கேறி வருகிறது. ஆரம்பத்தில் கோபியால் மட்டம் தட்டப்பட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார் பாக்யா.

ஆனால் கோபி மற்றும் பாக்யா விவாகரத்திற்கு பிறகு சுதந்திரப் பறவையாக மாறிவிட்டார் பாக்கியலட்சுமி. தனக்குத் தெரிந்த சமையலையே ஒரு பிசினஸ் ஆக தொடங்கி கொடிகட்டி பறந்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு முறை பாக்யாவை கோபி குத்தி காட்டும் போது ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உருவாகிறது.

Also Read : குடும்பப் பிரச்சினையை வைத்து குளிர் காய நினைக்கும் விஜய் டிவி.. பிக் பாஸை நாரடிக்கப் போகும் 3 சர்ச்சையான ஜோடிகள்

அந்த வகையில் இங்கிலீஷ் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸில் சேர்ந்து படிக்கிறார். இந்நிலையில் இனியா காலேஜில் முதல் நாள் சேர்வதற்காக பாக்யா அழைத்துச் செல்கிறார். ஆனால் அங்கு கோபியும் வந்து விடுகிறார். மேலும் ஆபீஸ் ரூமுக்கு செல்லும்போது பாக்யாவை கோபி கிண்டல் செய்கிறார்.

அங்கு இங்கிலீஷ் தான் பேசணும் உனக்கு என்ன தெரியும், நான் போறேன் என்று கதவை திறக்கிறார். ஆனால் அதிரடியாக பாக்யாவும் உள்ளே வருகிறார். மேலும் இனியா மற்றும் கோபி இருவருமே ஆச்சரியப்படும் அளவிற்கு பிரின்ஸ்பல் முன் பாக்யா இங்கிலீஷில் பிளந்து கட்டுகிறார். இதை பார்த்து வாயை அடைத்துப் போகிறார் கோபி.

Also Read : டிஆர்பி-யை எகிற வைக்க வரும் பிக்பாஸ் சீசன் 7.. தரமான 10 போட்டியாளர்களை இறக்கும் விஜய் டிவி

மேலும் பாக்யா இவ்வாறு இங்கிலீஷில் பேசியதை பார்த்து இனியா மிகுந்த சந்தோஷம் படுகிறார். வாயில் ஈ போகாத குறையாக அப்படியே பார்த்துக் கொண்டிருந்த கோபி இவளை பட்டிக்காடு என்று நினைத்தால் இப்போது இவ்வளவு அழகாக இங்கிலீஷ் பேசுகிறாளே என பொறாமை கொள்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் நாளுக்கு நாள் ராதிகா மற்றும் அவரது அம்மாவால் கோபி பிரச்சினையை சந்தித்து வருகிறார். ஆனால் பாக்யாவோ தனது தொழில், குடும்பம் என்று படிப்படியாக முன்னேறி வருகிறார். மேலும் இன்னும் பாக்கியாவால் பல இடங்களில் கோபி அசிங்கப்பட போகிறார். இவ்வாறு சுவாரஸ்யமான கதைகளத்துடன் பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.

Also Read : இனியா விஷயத்திலும் தோற்றுப்போன கோபி அங்கிள்.. யாருமே மனுஷனா கூட மதிக்கிறது இல்ல, என்ன கொடுமை சார் இது

- Advertisement -

Trending News