புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பாக்கியா உனக்கு இந்த பொழப்பு தேவையா.. ராதிகா கோபி பேசுறத ஒட்டு கேட்கும் நிலைமை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி தொடரில் முதல் மனைவி இருக்கும் அதே வீட்டில் இரண்டாவது மனைவி ராதிகாவை கூட்டி வந்து குடும்பம் நடத்தி வருகிறார் கோபி. என்னதான் ராதிகா நெகட்டிவ் கேரக்டராக இருந்தாலும் கல்லுக்குள் ஈரம் இருப்பது போல் அவர் மனதிற்குள் பாசம் இருக்க தான் செய்கிறது. ஜெனியை காப்பாற்றியதோடு மட்டுமல்லாமல் அவர் கூடவே இருந்து குடும்பத்தில் இருக்கும் மற்றவர்கள் வரும் வரை பார்த்துக்கொண்டார்.

பின்பு இவரைப் பற்றி தெரியாத ஈஸ்வரி நீதான் எல்லாத்துக்கும் காரணம். ஜெனியை நீதான் தள்ளிவிட்டு இருக்கிறாய் என்று மனசாட்சி இல்லாத படி வார்த்தையால் ராதிகாவை தாக்கினார். அப்பொழுது பாக்யா, இல்லை அத்தை இவர்தான் ஜெனியை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்து எனக்கும் தகவல் சொன்னார். பிறகு ஈஸ்வரி சொன்ன வார்த்தைக்கு எதுவும் மன்னிப்பு கேட்காமல் ராதிகாவை முறைத்துக் கொண்டு போய்விட்டார்.

Also read: உயிரைக் காப்பாற்றும் ராதிகா.. உருட்டுறதுக்கு கதையில்லாமல் சன் டிவியை பாலோ செய்யும் விஜய் டிவி

அடுத்ததாக இந்த கோபத்தை வைத்துக்கொண்டு ராதிகா ரூமில் இருந்த நிலையில், கோபியும் சரியாக விசாரிக்காமல் ராதிகாவிடம் கேட்கிறார். நீ ஏன் அப்படி பண்ணின இது எவ்வளவு பெரிய தப்பு. உனக்கு இது செய்ய தப்பா தெரியவில்லையா என்று தாறுமாறாக ராதிகாவை பார்த்து கேட்கிறார். சும்மாவே ராதிகா ருத்ர தாண்டவம் ஆடுவாங்க. இப்ப அவர் மேல தப்பு இல்ல சும்மாவா விடுவாங்க.

கோபியிடம் நீங்க புரிஞ்சுகிட்டது இவ்ளோதானா. உங்க அம்மாக்கு என்ன பத்தி தெரியாது என்னை எதிரியா பாக்குறாங்க. அதனால அவங்க என்ன அப்படி கேட்டதில்லை எனக்கு பெரிய கஷ்டம் இல்ல. ஆனா என்ன புரிஞ்சுகிட்டு என்ன காதலித்து கல்யாணம் பண்ணின நீங்களே இப்படி கேட்பது சரியா என்று சொல்லி நடந்த விஷயத்தை கூறுகிறார். அதன் பின் என்ன வழக்கம் போல கோபி கால்ல விழுந்து கெஞ்சாத குறையா மன்னிப்பு கேட்கிறார்.

Also read: ஐஸ்வர்யா ஓவர் ஆட்டத்தால் வந்த விளைவு.. இறுதி கட்டத்தை நோக்கி பரபரப்பாக நகரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

அடுத்ததாக கோபி, இனியா நிலா பாப்பா மற்றும் பசங்களுடன் ஜாலியாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்த ராதிகா மாடிக்கு சென்று அவர் ரூமில் இருக்கிறார். அந்த நேரத்தில் கோபி அப்பா கொடுத்தார் பாரு ஒரு ரியாக்சன் அதான் இருக்கிறதே அல்டிமேட். அதன் பின்பு கோபி மாடிக்கு சென்று ராதிகாவை பார்த்து நீ எப்பொழுது வந்தாய் நான் உன்னை கவனிக்கல என்று சொல்ல. உடனே ராதிகா உங்க குடும்பத்துடன் இருந்தா என் ஞாபகம் வருமா என்று கேட்கிறார்.

இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை பாக்கியா வெளியில் இருந்து ஒட்டு கேட்கிறார். பாக்கியா உனக்கு இதெல்லாம் ஒரு பொழப்பா என்று தோன்றுகிறது. அடுத்து ராதிகாவிடம் பேசி மறுபடியும் இவர்களுடைய பிரண்ட்ஷிப்பை தொடர போகிறார் பாக்யா. அப்புறம் என்ன கோபிக்கு ஜாலிதான் ஒரே வீட்டில் இரண்டு மனைவியுடன் இருக்கலாம். காபிக்கு ஒரு மனைவி ஆசைக்கு ஒரு மனைவி ராஜ வாழ்க்கை தான் இனி கோபிக்கு.

Also read: குணசேகரனின் வீழ்ச்சி ஆரம்பம்.. ஜனனி, அரசு செய்ய போகும் தரமான சம்பவம்

- Advertisement -

Trending News