Connect with us
Cinemapettai

Cinemapettai

baakiya-family

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பேச்சு மூச்சு இல்லாமல் நிலைகுலைந்து போன பாக்யா.. சுக்குநூறாக குடும்பம்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ஒவ்வொரு நாளும் அடுத்து என்ன நடக்கப்போகிறது என ரசிகர்களை ஆர்வத்துடன் பார்க்க வைக்கும் அளவுக்கு விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் செய்துகொண்டிருக்கிறது. இதில் இவ்வளவு நாள் ரசிகர்கள் பாக்யாவிற்கு கோபியின் கள்ளக்காதலி ராதிகா தான் என்ற உண்மை எப்போது தெரியும் என ஆர்வத்துடன் எதிர்பார்த்த நிலையில், அது தற்போது நடந்திருக்கிறது.

விபத்தில் சிக்கிய கோபியை மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அவர்களை பார்க்க ராதிகா மற்றும் பாக்யா இருவரும் விரைந்து வருகின்றனர். அங்கு செவிலியர்கள் இடம், தன்னை கோபியின் மனைவி என ராதிகா சொல்வதை பாக்யா பார்த்துவிடுகிறார்.

இதைக் கேட்டதும் பேச்சு மூச்சு இல்லாமல் நிலைகுலைந்து போன பாக்யா, அங்கேயே மயங்கி விழுகிறார். உடனே அக்கம்பக்கத்தினர் பாக்யாவை தூக்கி தண்ணீர் கொடுத்து சகஜமான நிலைக்குக் கொண்டு வருகின்றனர். இருப்பினும் பாக்யாவால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர முடியவில்லை.

இதன்பிறகு ராதிகாவின் கையைப்பிடித்து கோபி, ‘என்னை விட்டு சென்று விடாதே, நீ இல்லை என்றால் நான் செத்து விடுவேன்’ என சொல்வதை பாக்யா பார்த்துவிடுகிறார். ஏற்கனவே பாக்யாவிற்கு ஏதோ ஒரு பெண்ணுடன் கோபிக்கு தொடர்பு இருப்பது தெரிந்த நிலையில், அது ராதிகா என்பதுதான் பாக்யாவிற்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது.

இதன் பிறகு பாக்யா என்ன முடிவு எடுக்கிறார் என்பது தான் சுவாரஸ்யம். ஒருவேளை பாக்யா, ராதிகாவிற்காக கோபியை விட்டுக் கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் பாக்யாவின் நலனைக் கருதி தான்  ராதிகா, மும்பைக்கு கிளம்ப இருந்தால், அது மட்டுமின்றி ராதிகா வாழ்க்கையில் நடந்த அத்தனை விஷயமும் பாக்யாவிற்கும் தெரியும்.

மேலும் கோபிக்கும் பாக்யாவை சுத்தமாகவே பிடிக்காது என அவனே அடிக்கடி பாக்யாவிடம் சொல்வதால் கட்டாயப்படுத்தி வாழ்வதெல்லாம் ஒரு வாழ்க்கையா என்ற எண்ணம் பாக்யாவிற்கு நிச்சயம் தோன்றும். இருப்பினும் கோபியை உயர்வாக நினைத்திருக்கும் அவனுடைய தாய் மற்றும் மகள் இனியா இதை எப்படி தாங்கிக் கொள்வார்கள் என்பதுதான் பாக்கியவாள் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

Continue Reading
To Top