Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகாவின் பிரிவை தாங்க முடியாத கோபி ராதிகாவை சந்தித்து பேசிட்டு வருகிறேன் என்று கிளம்பி விடுகிறார். ராதிகாவை தேடிப்போன கோபியை நினைத்து ஈஸ்வரி வீட்டில் புலம்பி தவிக்கிறார். வேண்டாம் என்று விட்டுட்டு போன ராதிகாவை எதுக்கு கோபி தேடிப் போகணும். விட்டது என்று நிம்மதியாக நம்முடன் சந்தோசமாக இல்லாமல் ஏன் இப்படி பண்ணுகிறான் என்று இனியா செழியன் இடம் ஈஸ்வரி பேசிக் கொண்டிருக்கிறார்.
இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பாக்கியா மொத்த ஆத்திரத்தையும் கொட்டி தீர்க்கும் விதமாக ஈஸ்வரியை வெளுத்து வாங்கும் அளவிற்கு லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார். அதாவது உங்களுக்கு உங்க பிள்ளை உங்க பேச்சைக் கேட்டு உங்க கைக்குள்ளே அடங்கி இருக்கணும். அதற்காக அவருடைய சந்தோஷத்தையும் வாழ்க்கையும் கொஞ்சம் கூட யோசிக்க மாட்டீங்க. உங்க பிள்ளை விஷயத்தில் ரொம்ப மோசமாக நடந்து கொள்கிறீர்கள்.
என்னை நம்ப வைத்து கையெழுத்து வாங்கி விவாகரத்து வாங்கும் அளவிற்கு போன பொழுது கூட அவன் என்னதான் தப்பு பண்ணி இருந்தாலும் நீ அவனை விட்டு பிரிய கூடாது என்று என்னதான் சமாதானப்படுத்துறீங்க. வயசாகி இருந்தாலும் நீங்கள் இப்ப இருக்க பிள்ளைகளுக்கு என்ன நல்லது சொல்லிக் கொடுக்கிறீர்கள். ஆம்பள பசங்க என்ன தவறு பண்ணினாலும் அதை மறந்து மன்னித்து வாழ வேண்டும் என்பது எப்படி சரியாக இருக்கும்.
உங்கள் பிள்ளைக்கு ஒரு நியாயம் மருமகளுக்கு ஒரு நியாயமா? உங்க பிள்ளையை முந்தானையிலேயே முடிச்சு வைக்கணும் என்று நினைத்திருந்தால் நீங்கள் கல்யாணமே பண்ணி வைத்திருக்காமல் உங்க கூடவே வைத்திருக்க வேண்டியதுதானே. எதற்காக கல்யாணம் பண்ணி வச்சு என்னோட வாழ்க்கையை பாழாக்கனிங்க என்று ஈஸ்வரி வாயை திறக்க முடியாத அளவிற்கு பாயிண்ட் டூ பாயிண்ட் பேசி விட்டார்.
அடுத்ததாக ராதிகா வீட்டிற்கு போன கோபிக்கு ராதிகா சொன்னது நீங்கள் எந்த காரணத்தை கொண்டும் என்னையும் என் மகளையும் தேடி இந்த வீட்டிற்கு வந்து டிராமா பண்ணக்கூடாது. உங்களுக்கு எங்கே இருந்தால் நிம்மதி கிடைக்குமா அந்த இடத்தில் தான் நான் விட்டுட்டு வந்து இருக்கிறேன். இனி நீங்கள் நினைத்தபடி உங்க வாழ்க்கையே பார்த்துக் கொள்ளுங்கள். தயவு செய்து எங்களை கஷ்டப்படுத்தாதீர்கள் என்று வெளியே அனுப்பி விட்டார்.
ராதிகா இப்படி சொல்லி விரட்டியதால் என்ன பண்ணுவது என்று தெரியாத கோபி மறுபடியும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகும் விதமாக ஒயின்ஷாப்புக்கு போய் விட்டார். அங்கே ராதிகா சொன்னதை நினைத்து நண்பரிடம் பீல் பண்ணி பேசி தண்ணீரிலேயே மறுபடியும் மிதக்கும் அளவிற்கு குடிக்க ஆரம்பித்து விட்டார். இதற்கெல்லாம் கோபி ஒரு வகையில் காரணமாக இருந்தாலும் முழுக்க முழுக்க ஈஸ்வரி தான் காரணம்.