Tamil Cinema News | சினிமா செய்திகள்
படத்தில் இருந்து ப்ரேக் எடுத்த நடிகைக்கு பெஸ்ட் பெர்பாமர் விருது
படிப்பிற்காக நடிப்பிற்கு ரெஸ்ட் கொடுத்த நடிகை நிவேதா தாமஸ் விருதுடன் மீண்டும் திரை பயணத்தை தொடங்கி இருக்கிறார். மந்திரஜால சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நிவேதா தாமஸ். குழந்தை நட்சத்திரமாக பல தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர். தொடர்ந்து, ஜெய் நடிப்பில் வெளியாக நவீன சரஸ்வதி சபதம் படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகினார்.
நாயகி என்றாலும் படத்தில் அவருக்கு அழுத்தமான கதாபாத்திரம் இல்லை. இதை தொடர்ந்து, 2014வது வருடம் ஜில்லா படத்தில் விஜயின் தங்கையாக நடித்தார். அதில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார்.
கடந்த வருடம், கே.எஸ்.ரவீந்திரா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் நிவேதா நடித்த ஜெய் லவ குசா என்ற படம் தான் அவர் கடைசியாக நடித்தது. இதன்மூலம் தெலுங்கில் ஒரு நல்ல இடத்தை பிடித்து ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நான் படிக்கிணும்ப்பா என நல்ல பிள்ளையாக அறிவித்தார். சென்னையில் படித்து வரும் நிவேதா எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை படிப்பின் கடைசி செமஸ்டரை எழுதி இருக்கிறார். இதனை தொடர்ந்து, படிப்பு தான் முதலில் என கறாராக சொல்லிய பெற்றோர் இனி உன் இஷ்டம் என க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டனராம்.
இதையடுத்து, புதுப்படங்களுக்கு கதை கேட்டு வருகிறார் நிவேதா. இந்நிலையில் அவருக்கு தெலுங்கின் முன்னணி தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழாவில் பெஸ்ட் பெர்பாமர் ஆப் தி இயர் என விருது அளிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
